வேலணை சாட்டி நன்னீரின் சுவையில் மாற்றம்- பாதுகாக்க பனம் விதைகளை நடுகை செய்வோம் வாரீர்..படியுங்கள்!

வேலணை சாட்டி நன்னீரின் சுவையில் மாற்றம்- பாதுகாக்க பனம் விதைகளை நடுகை செய்வோம் வாரீர்..படியுங்கள்!

தமிழ் தேசிய பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமான பனை வளத்தினை பாதுகாப்பதற்காகவும், நிலத்தடி நீரினை பாதுகாப்பதற்காகவும், பனை வளத்திலிருந்து எமது தேசிய பொருளாதரத்தினை மேம்படுத்துவதற்காவும் எமது பிரதேசமான வேலணை சாட்டி மண்கும்பான் மற்றும் கடற்கரையோரங்கள் சார்ந்த நிலப் பகுதிகள் மற்றும் அராலி வெளியின் தரவைப் பகுதிகளிலும் பனம் விதைகளை நடுகை செய்வது காலத்தின் தேவையாகவுள்ளது.

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

இவ் பனம் விதை நடுகை செய்வதற்கு மேற்குறிப்பிட்ட வேலணை சாட்டி மண்கும்பான் மற்றும் அராலி வெளிதரவைப்பகுதிகளை தெரிவு செய்கின்றமைக்கான காரணம் பின்வருமாறு,

யாழ் குடாநாட்டிற்கு நன்னீர் கிடைப்பதற்கான காரணமாக இருப்பது 04 நிலத்தடி நீர்படுக்கைகள்ஆகும். அவையாவன 1) வலிகாம்ம் நிலத்தடி நீர் , 2) தென்மராட்சி நிலத்தடி நீர், 3) வடமராட்சி நிலத்தடி நீர், 4) ஊர்காவற்றுறை (தீவகம்) நிலத்தடி நீர். இந்த ஊர்காவற்றுறை நிலத்தடி நீரானது மண்குப்பான் வேலணை சாட்டி பகுதிகளைக் குறிக்கின்றது. இப் பகுதியில் தான் தீவக மக்களுக்கு தேவையான பெருமளவான குடிநீர் கிடைக்க காரணமாக இருக்கும் நிலத்தடி நீர்ப் படுககை உள்ளது. நீர் படுக்கையின் கொள்ளவு அதிகரிக்க செய்ய வேண்டுமாயின் கடல் மட்டத்திற்கு மேல் எவ்வளவு உயரத்திற்கு நீரினை சேமிக்கின்றமோ அதன் 40 மடங்கினால் நன்னீர் படுக்கையின் ஆழம் கூடும் இதனை கருத்தில் கொண்டே எமது முன்னோர்கள் குளங்களை அமைத்தார்கள் என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன்.

அதேபோல் நிலத்தடி நீர் வளத்தினை மிக மோசமாக பாதிக்கும் காரணங்களில் கடல் மட்டத்திற்கு மேலாக மண் முகடுகள் இருக்கின்ற போது நிலத்தடி நீரின் மேற்பரப்பு கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்தது காணப்படும். உதாரணம் :- வல்லிபுர ஆள்வார் ஆலய தீர்த்த உற்சவம் நடைபெறும் போது மணலினை சிறிதளவு கையால் தோண்டி நன்னீர் பெற்று பயன்படுத்துவது (வடமராட்சி) .இதே போல் எமது சாட்டி வெள்ளைக் கடற்கரைக்கு அருகில் (நிலப்பரப்பில் ) முன்னர் கிண்டினால் நன்னீர் ஊற்று காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால் மண்/மணல் முகடுகளை அகற்றினால் நன்னீர் மட்டம் (water table ) குறையும் எவ்வளவு ஆழம் கடல் மட்டத்திற்கு மேல் குறைகின்றதோ அதன் 40 மடங்கினால் குறையும், ஒரு கட்டத்தில் நிலத்தடி நன்னீர் குறைந்து அவ்விடத்திற்கு கடல் நீர் உட்புகும் இதன் விளைவாக அந்த நிலப்பரப்பு உவர் நிலப்பரப்பாக மாறும். இன்நிலையில் மண்கும்பான் மற்றும் வேலணை சாட்டி ஆகிய பகுதியில் மணல் அகழ்வு (அனுமதியின்றி) இப்போதும் இடம் பெற்று வருவது யாவருக்கும் தெரிந்த விடயம் காலப்போக்கில் மணல் முகடுகள் அகற்றப்பட நிலத்தடி நன்னீர் குறைவடைந்து கடல் நீர் உட்புகுந்து உவர் நிலப்பரப்பாக மாறுவதை நாம் தடுக்க வேண்டும்.

இதனை கருத்திற்கொண்டு மக்களை விழிப்படைய செய்வதற்காகவும், பனை நடுகை செய்வதன் மூலம் நிலத்தடி நீரினை ஓரளவு பாதுகாக்க முடியும்.

இது எவ்வாறு என்றால்? பனை வேரின் அமைப்பானது நன்னீரினை உறிஞ்சி பாதுகாப்பாக வைத்திருக்கும் தன்மை கொண்டது இதனால் நிலத்தடி நீர் ஓரளவு பாதுகாக்கப்படும் என்ற விடயத்தினை கருத்தில் கொண்டும், மேலும் நன்னீர்ப் படுக்கையை பாதுகாப்பதுடன் பனை சார் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்ற எதிர்கால சிந்தனையுடனும் பனம் விதைகள் நடுகை செய்யப்படல் வேண்டும் அத்துடன் இருக்கின்ற பனைமரங்களை அழிவிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

இதற்கு உறுதுணையாக இருக்க அனைவருக்கும் இதய சுத்தியுடன் பாடுபட வேண்டும் அத்துடன் விழிப்பூட்டல்களை செய்ய வேண்டும். முன்னைய காலத்தில் மண்கும்பான் மற்றும் வேலணை சாட்டிப் பகுதிகளில் மணல் முகடுகளாக சிறிய மலைகள் போல் காணப்பட்டது அக்காலத்தில் சாட்டி நிலத்தடி நீரானது மிகவும் சுவைமிகுந்ததாக காணப்பட்டதுடன் இவ்நீரானது அமிர்தம் என்றும் அழைக்கப்பட்டது. 1990ம் ஆண்டிற்கு பின் அளவுக்கதிகமாக மணல் எடுக்கப்பட்டு மணல் மேடுகள் அழிக்கப்பட்டது.(குன்று குழியானது) அத்துடன் பனை வளமும் அழிக்கப்பட்டது .இதன்பயனாக சாட்டி கிராமத்தின் நீர்ப்படுக்கையில் மாற்றம் ஏற்பட்டு 60இற்கும் மேற்பட்ட கிணறுகள் உவர்நீராக மாறியுள்ளது.சாட்டிநீரின் சுவையிலும்மாற்றமேற்படுகின்றது.இது நிதர்சனமான உண்மையாகும். வேலணை சாட்டி நன்னீர்படுக்கையினை நாம் பாதுகாக்காது விட்டால் இன்னும் பத்து வருடத்தில் அமிர்தமென பெயர்பெற்ற வேலணை சாட்டி நன்னீர் அழிந்து விடும்என்பது கசப்பான உண்மையாகும்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux