போதையொழிப்பு வாரத்தை முன்னிட்டு,தீவக பாடசாலை மாணவர்கள் ஊர்வலம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

போதையொழிப்பு வாரத்தை முன்னிட்டு,தீவக பாடசாலை மாணவர்கள் ஊர்வலம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!


நாட்டில் போதைவஸ்து ,மது,புகைத்தல் பாவனையை தடுத்தல், கட்டுப்படுத்தல் சம்பந்தமான-போதையொழிப்பு வாரத்தின் இறுதி நாளாகிய இன்று தீவகம் (25.01.2019)புங்குடுதீவு பிரதேச அனைத்து பாடசாலை சமூகத்துடன் – புங்குடுதீவு உலகமையம்,சூழலியல் மேம்பாட்டு அமைவனம்(சூழகம்) ஊர்காவற்துறை பொலிஸ் ஆகியன ஒன்றிணைத்து அமைதி பேரணியை நடாத்தினர்.
இப்பேரணிக்கு கத்தோலிக்க திருச்சபையும் முழுஒத்துழைப்பு வழங்கியது .

இப்பேரணியின் பிரதான நோக்கமாக, தீவக மாணவச்செல்வங்களின் கல்வியையும் , மனநிம்மதி , சந்தோசத்தை தொலைக்கும் போதைவஸ்து , மதுபானத்தை ஒழிக்க வேண்டும் என்பதோடு-மேலும் புங்குடுதீவில் இயங்கும் மதுபானசாலையை இடமாற்ற வேண்டும் என்பதும் ஆகும் .
இப்பேரணியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் , ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் , சமூகஆர்வலர்கள் கலந்துகொண்டதாக அறியமுடிகின்றது.

Write caption…

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux