தீவகம் புங்குடுதீவில் இயங்கும்,தும்புத்தொழிற்சாலை, நிர்வாகத்தின் வேண்டுகோள் இணைப்பு!

தீவகம் புங்குடுதீவில் இயங்கும்,தும்புத்தொழிற்சாலை, நிர்வாகத்தின் வேண்டுகோள் இணைப்பு!


தீவகம் புங்குடுதீவு வயலூர் முருகன் தும்புத்தொழிற்சாலையின் நோக்கம் இங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதேயாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புங்குடுதீவிலிருந்து கிடைக்கும் பொச்சுமட்டைகளை மூலப்பொருட்களாகக் கொண்டே – இத்தொழிற்சாலை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கிகிராமத்து மக்கள் பொச்சுமட்டையை வெளியிடத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்யாமல் -இத்தொழிற்சாலைக்கு பொச்சுமட்டை சேகரிப்பவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யுமாறு -நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.
தங்களிடம் இருக்கும் மட்டைகளை கீழ் வரும் தொழிற்சாலை தொலைபேசி இலக்கத்துக்கு 0778386772 தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினால் மட்டை சேகரிப்பவர்களை தங்கள் இடத்துக்கு அனுப்பி பொச்சுமட்டைகளை பெற்றுக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை, புலம்பெயர் மக்களும் ,ஊரில் உள்ள உறவுகளுக்கும்
, தெரியப்படுத்துமாறு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux