அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் ஜப்பசி வெள்ளிக்கிழமை திருவிழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே!ஜப்பசி வெள்ளியின் 4வது வாரமான 08-11-2013 அன்று நடைபெற்ற,திருவிழாவின் நிழற்படங்களை உங்களின் பார்வைக்காக கீழே பதிவு செய்துள்ளோம்.அடுத்த வெள்ளிக்கிழமையுடன் திருவிழா நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று நடைபெற்ற-சிறப்புத்திருவிழாவின் உபயகாரராக-அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்டவரான-அமரர் பரியாரி சின்னத்துரை அவர்களின் சார்பாகவே அவரது பிள்ளைகளினால் இத்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.