கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்திற்குள்ளானதில் சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி-படங்கள் இணைப்பு!

கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்திற்குள்ளானதில் சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி-படங்கள் இணைப்பு!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இன்று (27.12.2018 )வியாழக்கிழமை பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது 

யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள தரிப்பிடத்தில் பயணிகளை இறக்குவதற்கு நிறுத்திய போது அதனை முந்திச் செல்ல முற்ப்பட்ட கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி னெ்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நெர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது 

இதில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்  

வவுனியாவிலிருந்து கிரவலுடன் சென்றுகொண்டிருந்த டிப்பர் தடம்புரண்டுள்ளதுடன் வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பரின் பெட்டி  உடைந்துள்ளது தரிப்பிடத்தில் நின்ற தனியார் பஸ்ஸும் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார் 

விபத்து அதிவேகத்தினால் இடம்பெற்றுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux