யாழ்  கஸ்தூரியார்  வீதியில் இடம்பெற்ற   விபத்தில்,மண்டைதீவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் பலி-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ் கஸ்தூரியார் வீதியில் இடம்பெற்ற விபத்தில்,மண்டைதீவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் பலி-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ் கஸ்தூரியார் வீதியில், கடந்த 22.11.2018 வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற,விபத்தில் சிக்கி-மண்டைதீவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான, திருமதி சுநீதி கோணேஸ்வரன் (வயது 50) அவர்கள் பரிதாபமாக  சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரியவருகின்றது.

யாழ் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள ரொலெக்ஸ் பேக்கரியில் பாண் வாங்குவதற்காக வீதியைக்கடக்க முயன்றபோது-வேகமாக வந்த உந்துருளி மோதித்தள்ளியதாக மேலும் அறிய முடிகின்றது.

மரண அறிவித்தல்

மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட, அமரர் திருமதி சுநீதி கோணேஸ்வரரன் அவர்கள் 22 11 2018 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னார் கோணேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற,சுப்பையா-புஸ்பமலர் தம்பதிகளின் அன்புமகளும்,

கிருஸ்ணபிள்ளை-இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிந்துஜன்,கஜவதனன்,சுஜிபா,கோபிகாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 26.11.2018 திங்கட்கிழமை அன்று நண்பகல் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று- பி.ப 2.00 மணிக்கு தகனக்கிரியைக்காக, மண்டைதீவு இந்து மயானத்திற்கு(தலைக்கீரி) எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு…..

திரு கோணேஸ்வரன்(கணவர்) 00 94 76 20 15 584

சீதா–0094 77 97 65 341

வாணி-0094 77 50 72 462

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux