மண்டைதீவு மகாவித்தியாலய வளாகத்தில்,மழலைகள் முன்பள்ளி திறந்துவைக்கப்படவுள்ளது-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்டைதீவு மகாவித்தியாலய வளாகத்தில்,மழலைகள் முன்பள்ளி திறந்துவைக்கப்படவுள்ளது-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்டைதீவு மகாவித்தியாலய வளவினுள் பாழடைந்து காணப்பட்ட,ஆசிரியர் தங்குவிடுதிக் கட்டிடம்-“மண்டைதீவு மக்கள் ஒன்றியம்”என்ற அமைப்பினால் பொறுப்பெடுக்கப்பட்டு,உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலும் வாழும்-இக்கிராமத்தினைச் சேர்ந்த,பல நல்லுள்ளங்களின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு-வரும் 24.11.2018 சனிக்கிழமை அன்று   திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியினை முன்னின்று செயற்படுத்திவரும்,மக்கள் முன்னேற்ற ஒன்றியத்தின் காப்பாளர் திரு வே.ளுானோதரன் அவர்கள்  தெரிவிக்கையில்…இப்பணிக்கு பல லட்சம் ரூபாக்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில்,பணிகள் நிறைவுபெற மேலதிக நிதி தேவைப்படுவதாகவும்-புலம்பெயர்நாடுகளில் வசிக்கும்-மண்டைதீவு மக்கள் உதவிட முன்வருமாறு, அல்லையூர் இணையத்தின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலதிக தொடர்புகளுக்கு…

திரு வே. ஞானோதரன்( காப்பாளர்-மண்டைதீவு மக்கள் முன்னேற்ற ஒன்றியம்)

தொலைபேசி இலக்கம்….094773060008

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux