அல்லைப்பிட்டியின் கிழக்கு வீதியினை புனரமைக்க-ஒரு லட்சத்து 50  ஆயிரம் ரூபாக்கள் அனுப்பி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியின் கிழக்கு வீதியினை புனரமைக்க-ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாக்கள் அனுப்பி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி வடக்கு பிரதான வீதியிலிருந்து-பழைய அலுமினியம் தொழிற்சாலைக்கு கிழக்குப் பக்கமாக ஊர்மனைக்குள் ஊர்ந்து செல்லும் வீதியின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த மதகு நீண்ட காலமாக முழுமையாக உடைந்த நிலையில் காணப்படுவதினால் இப்பாதை ஊடாக வாகனங்கள் பயணம் செய்வது முடியாத காரியமாக உள்ளது.

அத்தோடு  நீண்டகாலமாக புனரமைக்கப்படாத காரணத்தால் இதனூடாகச் செல்லும் வீதியும் மிக மோசமாக பழுதடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும் . எனவே அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன்-புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களை ஒன்றுசேர்ந்து இந்த வீதியையும்-இடையில் உடைந்து கிடக்கும் மதகையும் திருத்தி இப்பகுதி மக்களின் சீரானபோக்குவரத்துக்கு வளியமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற  உயர்ந்த நோக்கோடு-ஜெர்மனியில் வசிக்கும் திரு தில்லையம்பலம் கண்ணன்  அவர்கள் முன் வந்திருந்தார்.

புலம்பெயர்ந்து வாழும் எம் ஊர் மக்களிடமிருந்து நிதியைத் திரட்ட மேற்கொண்ட முயற்சி பலமாதங்களாகியும் போதியளவு பயன்தராதநிலையில் சேர்ந்த நிதியுடன்-அவரும் ஒருதொகை நிதியினைச் சேர்த்து-மொத்தம் ஒருலட்சத்து ஜம்பது ஆயிரம் ரூபாக்களை முதற்கட்டப் பணிகளுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

மதகைத் திருத்தி-வீதியை புனரமைக்க-மேலும் அதிகளவு நிதி தேவைப்படுவதனால்-நீங்களும் ஊர் மறவாத மனிதர்களாக -ஊர்ப்பற்றுள்ளவர்களாக இணைந்து -உங்களால் முடிந்த நிதி உதவியினை விரைந்து வழங்கிட முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 மேலதிக தொடர்புகளுக்கு*** T.கண்ணன்  00492013602592

நூற்றுக்கணக்கான புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்கள்-இப்பாதையின் நிலையினை கடந்த பல வருடங்களாக ஊருக்குச் சென்று திரும்பும் போது  பார்வையிட்டு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 PICT1579 PICT1582 PICT1580

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux