பிரான்ஸில் காலமான,மாணவன் விகாஷின் 2ம் ஆண்டு நினைவை முன்னிட்டு-நடைபெற்ற, அறப்பணியின் விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,மாணவன் விகாஷின் 2ம் ஆண்டு நினைவை முன்னிட்டு-நடைபெற்ற, அறப்பணியின் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணையை, பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவன் விகாஷ் ராசகுமார் அவர்கள் கடந்த 19.10.2016 அன்று பரிஸில் விபத்தில் சிக்கி அகாலமரணமானார்.

அமரர் செல்வன் விகாஷின் 2ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரால்,மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் இரண்டு கால்களை இழந்த  திரு வீரகத்தி என்னும் பெயர்கொண்ட பெரியவருக்கு சக்கரநாற்காலியும் வழங்கிவைக்கப்பட்டது.

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 19.10.2018 வெள்ளிக்கிழமை பகல் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்-அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிய சிறப்புணவும் வழங்கப்பட்டது.

வன்னேரிக்குளத்தில் அமைந்துள்ள யோகர்சுவாமிகள் திருவடிநிலைய முதியோர்களுக்கும் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் ஆத்மசாந்திப்பூஜையும் நடத்தப்பட்டது.

 தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்-முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் அங்கு வசிக்கும்-இரண்டுகால்களை இழந்த முதியவர் திரு வீரகத்தி வயது 68 அவர்களுக்கு  சக்கரநாற்காலியும் வழங்கிவைக்கப்பட்டது.

அமரர் செல்வன் விகாஷ் ராசகுமாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux