அல்லையூர் இணையத்தினால்,25 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தினால்,25 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய அறப்பணியின் பணியின் 441 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு. – கொடிய வறுமையில் வாடிய 25 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மாயவனூர் புதுக்காடு என்னும் கிராமத்தில் கொடிய வறுமையில் வாடிய -25 குடும்பங்களுக்கு 08.10.2018 திங்கட்கிழமை அன்று -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில்-தருமபுரம் நமசிவாய பவுண்டேசனூடாக,  50 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான உலர்உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிதி அனுசரணையினை,பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி சிவகாமிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு-அவரின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.அவர்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு திருமதி சிவகாமிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு-08.10.2018 திங்கட்கிழமை புரட்டாசி மகாளய அமாவாசை தினமான அன்று -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தருமபுரத்தில் அமைந்துள்ள நமசிவாய மூதாளர் பேணலகத்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு சிறப்புணவும் வழங்கப்பட்டது.

அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-அன்னதானப்பணிக்கு,புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ்மக்கள் பேராதரவு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும். 

ஜப்பசி மாதம் கீழ் வரும் திகதிகளில் அன்னதானத்திற்கான முற்பதிவு செய்யப்பட்டுள்ளதனை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

இதுவரை 444 தடவைகள் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் எமது முகநூல் ஊடாகவே உடனுக்குடன் விபரங்களை  வெளியிட்டு வருகின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

06.10.2018
07.10.2018
08.10.2018
09.10.2018
13.10.2018
19.10.2018
20.10.2018
22.10.2018
26.10.2018
31.10.2018

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux