மண்டைதீவில் நலிவுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற உலர்உணவுப்பொருட்களுக்கான கணக்கு விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவில் நலிவுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற உலர்உணவுப்பொருட்களுக்கான கணக்கு விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில்,வறுமைக்கோட்டின் கீழ் தவிக்கும் மக்களுக்கு மாதந்தோறும்  உலர்உணவுப்பொருட்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது நீங்கள் ஏற்கனவே அறிந்தசெய்தியாகும். 

மண்டைதீவுக் கிரமத்தில்   மிகவும் வறுமையான  நிலையில் வசிக்கும் வெளிநாட்டு உதவிகள் இல்லாத- முதியோர்கள்,  வலுவிழந்தோர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட (15) பதினைந்து குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக கடந்த  கார்த்திகை(11) மாதம் முதல்   தலா ஒரு குடும்பத்தினருக்கு இரண்டாயிரம்  ரூபாக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலும் பயனாளிகள் இணைக்கப்பட்டு கடந்த மார்கழி மாதம் முதல் 24 பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றது.

நாம்  புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்,ஊரில் வாழ்கின்ற ஆதரவற்றவர்களின் துயர்துடைத்திட  வேண்டும் என்று நினைத்து செயலாற்றும்-மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் திரு சி.ஜெயசிங்கம் அவர்களின் முழுமுயற்சியின் பலனாகவே இவ்வுணவுப்பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன.

மேலும் இப்பணியினை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருப்பதனால் -புலம்பெயர் நாடுகளில் வாழும் மண்டைதீவு மக்கள் இப்பணியில் இணைந்து கொண்டு ஆதரவற்றுத் தவிக்கும் எம்மக்களுக்கு உதவிட முன்வருமாறு  பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

குறிப்பு:- இப்பணியில் இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் தங்களால் முடிந்த உதவியினை செய்தால் வலுவிழந்து இருப்பவர்களையும் மேலும் இணைத்துக்கொள்ளலாம் ,மாதாந்தம் 25ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிக்குள் இக்கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு…

திரு சி.ஜெயசிங்கம் 0014163190409  (viber)-கனடா

கார்த்திகை மாதம் வழங்கப்பட் ட உலர்உணவுப்பொருள்கள் கொடுப்பனவில் பயன் பெற்ற பதினைந்து (15)பயனாளிகளின்  பெயர் விபரங்கள் பின்வருமாறு .

(1)-விநாயகமூர்த்தி மனோகரன் 1ம் வட்டாரம் .
(2)-கந்தசாமி சின்னட்டி அம்மா 2ம் வட்டாரம் .
(3)-கையிலாசபிள்ளை ராதா 2ம் வட்டாரம் .
(4)-பத்மநாதன் உருத்திராதேவி 6ம் வட்டாரம்
(5)-பிரபலசிங்கம் சின்னம்மா 6ம் வட்டாரம்
(6)-தயா மகள் (வலுவிழந்தவர் )6ம் வட்டாரம்
(7)-பரமானந்தம் லோகேஸ் 6ம் வட்டாரம்
(8)-பகீரதி பகவசிங்கம் 7ம் வட்டாரம்
(9)-காந்தி கனகரத்தினம் 7ம் வட்டாரம்
(10)-இராமலிங்கம் மகாலட்சுமி 7ம் வட்டாரம்
(11)-செல்லையா கௌரி 7ம் வட்டாரம்
(12)-சந்திரா கனகரத்தினம்( 1ம் )8ம் வட்டாரம்
(13)-சுப்பிரமணியம் திலகவதி 8ம் வட்டாரம்
(14)-ஜெயபாலசிங்கம் புனிதா 8ம் வட்டாரம்
(15)-குமாரசாமி அஞ்சலி 8ம் வட்டாரம்

இவர்களுடன்  மேலும் மார்கழி மாதம் தொடக்கம் ஒன்பது(9) பயனாளிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 24 பயனாளிகள் தொடர்ந்து உலர்உணவு பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு :

(16)-நடராசா ரஞ்சா 6ம் வட்டாரம் .
(17)-நமசிவாயம் ரஞ்சினி 6ம் வட்டாரம்
(18)-மதியாபரணம் சுந்தரநாயகி 6ம் வட்டாரம்
(19)-விமலநாதன் கமலா 6ம் வட்டாரம்
(20)-அப்பாத்தம்பி மணியம்மா (தேவாரம் பாடுபவர் )6ம் வட்டாரம்
(21)-சபாரத்தினம் ஆனந்தி 6ம் வட்டாரம்
(22)-செல்லத்துரை ஏகாம்பரம் (இளையப்பு )8ம் வட்டாரம்
(23)-தருமகுலசிங்கம் ராஜேஸ்வரி (சின்னட்டி ஆச்சி )8ம் வட்டாரம்
(24)-ஐயம்பிள்ளை பவளம்மா 8ம் வட்டாரம் .
மேற்படி மொத்தமாக இருபத்திநான்கு பயனாளிகள் தற்போது  பயன் பெற்று வருகின்றனர்.

மேலும் வலுவிழந்தவர்களை இணைத்துக்கொள்ள வெளிநாடுகளில் வசிக்கும் மண்டைதீவு மக்கள் அனைவரும் உதவி செய்ய முன்வருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் .

இக்கொடுப்பனவு  பற்றிய முழுமையான கணக்கு விபரங்கள்-திரு சி.ஜெயசிங்கம் அவர்களினால்,எமது இணையத்திற்கு அனுப்பப்பட்டு- கீழே உங்கள் பார்வைக்கு கைப்பட எழுதி  பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி மேலதிக விபரங்கள் அறிய விரும்பினால் கீழ் வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தவும்.

திரு சி.ஜெயசிங்கம் 0014163190409  (viber)-கனடா

உலர்உணவுப்பொருட்கள் வழங்கியமைகான  பற்றுச்சீட்டுக்கள் சிலதும் உங்கள் பார்வைக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux