தீவகம்  சோளாவத்தை பகுதியில் களவாடப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரம்,மண்டைதீவுச்சந்தியில் பறிமுதல்-படங்கள்  இணைப்பு!
Exif_JPEG_420

தீவகம் சோளாவத்தை பகுதியில் களவாடப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரம்,மண்டைதீவுச்சந்தியில் பறிமுதல்-படங்கள் இணைப்பு!

சனிக்கிழமை பகல் வேலணை சாேளாவத்தை பகுதிதியில் பழைய இரும்பு உடைந்த பிளாஸ்ரிக்காெள்வனவு செய்வதாக கூறிக்கொண்டு வீடொன்றினுள் வியாபாரிகள் போன்று  நுழைந்த இரு முஸ்லிம் இளைஞர்கள்  அங்கு எவருமில்லாததை சாதகமாக்கி அங்கிருந்த நீர் இறைக்கும் மோட்டார்  இயந்திரமொன்றினை களவாடிச்செல்வதைஅவதானித்த தீவகத்தின் மைந்தனும்,வேலணை பிரதேச சபையின் உறுப்பினருமாகிய சிற்பனையூர்  திரு சிவலிங்கம் அசாேக்குமார் அவர்கள் அவ்வாகனத்தை  பின்தாெடர்ந்து விரட்டிச்சென்றதாேடு- மண்டைதீவு சந்தியில் காவல் கடமையில் இருந்த  பாெலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து  மண்டைதீவு சாேதனை சாவடியில் வைத்து-  இந்த இரு நபர்களும்  சப்  இன்ஸ்பெக்டர் விவேகானந்தராஐ்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும்  கள்ளமாடு கடத்தலில் கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதம் வரை சிறையில் இருந்தவர்  விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தீவுப்பகுதிக்குள்  பழைய இரும்பு பொருட்களை  காெள்வனவு  செய்வதாக கூறி  நுழைகின்ற சிலர் சட்டவிராேத 
மாடு கடத்தல்- மற்றும் களவு-கொலை  போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக  சமூக ஆர்வலர்கள்
தொடர்ந்து  குற்றம் சுமத்துகின்றனர்.இதனை முழுமையாக தடுப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து  தகுந்த நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனது உயிரையும் பொருட்படுத்தாது துணிந்து செயற்பட்ட வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு சிவலிங்கம் அசாேக்குமார் அவர்களை நாமும் பாராட்டுகின்றோம்.

Exif_JPEG_420

Exif_JPEG_420

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux