கா.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த,மாணவர்களை பரிசளித்து கௌரவித்த புளியங்கூடல் மாணவர் வளாகம்-படங்கள் இணைப்பு!

கா.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த,மாணவர்களை பரிசளித்து கௌரவித்த புளியங்கூடல் மாணவர் வளாகம்-படங்கள் இணைப்பு!

தீவகம்  புளியங்கூடல் கிராமத்தில், கடந்த வருட  க.பொ.த(சா/த) பரீட்சையில் சித்திபெற்ற 18 மாணவ மாணவிகளை, பாராட்டி கௌரவித்து பரிசு வழங்கிய   சிறப்பு நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இவ்விழாவினை, சுவிஸ் நாட்டிலிருந்து இயங்கும்- “புளியங்கூடல் மாணவர் வளாகம்” என்ற முகநூல் ஒழுங்கு செய்ததுடன்-மேலும்  இதற்கான நிதி அனுசரணையினை, அந்த முகநூலின் இணைந்துள்ள ஊர் நண்பர்கள் இணைந்து வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள்- இணைந்து  இவ்விழாவை  சிறப்பாக ஏற்பாடு செய்ததாகவும்-சிறப்பு அதிதிகளாக, இப்பகுதிபாடசாலை அதிபர்களும், கல்விமான்களும், ஊர் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கெளரவித்தாக மேலும் அறியமுடிகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux