ஆசையாய் பராமரித்த வாழைக்குலையும்-ஜம்பது ஆயிரம் ரூபா பெறுமதியான சோலர் மின்கலமும் அல்லைப்பிட்டியில் மாயம்-விபரங்கள் இணைப்பு!

ஆசையாய் பராமரித்த வாழைக்குலையும்-ஜம்பது ஆயிரம் ரூபா பெறுமதியான சோலர் மின்கலமும் அல்லைப்பிட்டியில் மாயம்-விபரங்கள் இணைப்பு!

Tamil-Daily-News_83872187138

அல்லைப்பிட்டியில்   இடம்பெற்ற-இரண்டு  திருட்டுக்களை எமது இணையத்தில் பதிவு செய்யுமாறு இத்திருட்டுக்களினால் பாதிக்கப்பட்ட இருவர் தொலைபேசி ஊடாக  தொடர்பு கொண்டு எம்மைக்கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள்  தெரிவித்த தகவல்களை  கீழே பதிவு செய்துள்ளோம்.

திருட்டு-01-வாழைக்குலை

அந்த முதிய தம்பதியினர் ஆசை ஆசையாக பராமரித்து வந்த வீட்டுத் தோட்டத்தில் செழித்து வளர்ந்து நின்றதுஅந்த வாழை- குலை தள்ளிய வாழையில் என்றுமில்லாதவாறு அதிக எண்ணிக்கையான காய்கள் காணப்பட்டதாகவும்.-இரவும் பகலும் அதனை பாதுகாத்து வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரவு 12 மணியளவில்  வேலியால் வளவுக்குள் புகுந்த திருடன் வாழைக்குலையை  வெட்டிச்சென்றது-அந்த முதிய தம்பதியினரை மிகுந்த வேதனை அடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

                                                                                          திருட்டு-02-சோலார் மின்கலம்

அல்லைப்பிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிக்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதற்காக- அதன் உரிமையாளரால் ஜெர்மனியிலிருந்து அண்மையில் எடுத்துச் சென்று பொருத்தப்பட்டிருந்த-50 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான சோலார் மின் கலத்தினை -கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருடர்கள் அபகரித்துச் சென்றுவிட்டதாகவும்-ஏற்கனவே கடைவாசலில் பொருத்தப்பட்டிருந்த-விலை உயர்ந்த மின்குமிழ்கள் அனைத்தையும் திருடி விட்டார்கள் என்றும் -எங்கள் கிராமத்தின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பெருமளவு நிதியினைச் செலவு செய்து அமைக்கப்பட்டிருக்கும் இக்கடைத் தொகுதிகளின் பாதுகாப்புக்கு இத்திருடர்களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் மிகுந்த வேதனையடைவதாகவும்-இதன் உரிமையாளர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.

danny 437

முக்கிய மேலதிக தகவல்

இத்திருட்டுக்களினால் முதிய தம்பதியினர் மனரீதியாகவும்-மற்றவர் பணரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன்-இவர்களின் பெயர்விபரங்கள் அனைத்தும் எம்மிடம் ஆதாரத்துடன் உள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.  

450px-A_banana_bunch_with_a_centralized_stem

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux