வேலணை பாடசாலைகளில் கல்வி கற்கும்,(5ம் வகுப்பு)  மாணவர்களுக்கு இலவச பயிற்சி  வகுப்புக்கள்  ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

வேலணை பாடசாலைகளில் கல்வி கற்கும்,(5ம் வகுப்பு) மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணையில், பெற்றோர்களின் வேண்டுகோளிற்கு இணங்க கலைவாணி கல்வி நிலையமும், விடிவெள்ளி அமைப்பும் இணைந்து நடத்துகின்ற தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் கருத்தரங்கின் அங்குராற்பண நிகழ்வு 26.05.2018  சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் விடிவெள்ளி அமைப்பின் செயலாளரும் கலைவாணி கல்விநிலைய இயக்குநரும் வேலணைப் பிரதேச சபை உறுப்பினருமாகிய லயன் சி.அசோக்குமார் அவர்களின் தலைமையில் வேலணையில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வின் விருந்தினர்களாக விடிவெள்ளி அமைப்பின் உறுப்பினர்களான வேலணைப் பிரதேச சபையின் உப தவிசாளர் திரு பொ நடனசிகாமணி அவர்களும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திரு தி. ஹேமதாஸ் அவர்களும் மற்றும் சமூகசேவையாளர் திரு இ.சிவநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
வேலணைப் பிரதேசத்தில் உள்ள 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இவ் பயிற்ரிப்பட்டறையில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.கலந்துகொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்- மற்றும் சிற்றுண்டிகள் மதிய உணவுகள் என்பன வழங்கப்பட்டன.
இப்பயிற்சி கருத்தரங்கானது இனிவரும் காலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலை 8.30 மணிக்கு தொடர்ச்சியாக இடம்பெற ஏற்பாடுகளை விடிவெள்ளி அமைப்பின் கல்வி பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.என்பதை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தெரிவிக்கின்றனர்.
இக்கருத்துப் பயிற்சி பட்டறையானது- யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி கல்வி வலயங்களில் பிரபலமான ஆசிரியகுழுவினரால் நடாத்தப்படுகின்றது.
இதன் முன்னோடியாக இன்றைய வகுப்பு திரு செ. வினோத்குமார் (ஆசிரியர் யா/இந்து ஆரம்பப் பாடசாலை,ஞானோதயம் புத்தக ஆசிரியர்)அவர்களால் நெறிப்படுத்தப்பட்டது.
இதற்கான முழுமையான நிதியணுசரனையை பிரித்தானியாவில் உள்ள விடிவெள்ளி அமைப்பின் குழுமத்தினர் வழங்கியுதவுகின்றனர்.

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux