மண்டைதீவில் அழிவிலிருந்த, ஓர் முருகன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன-விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவில் அழிவிலிருந்த, ஓர் முருகன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில் அழிவிலிருந்த,சிறுப்புலம் முருகன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த யுத்தகாலங்களுக்கு முன்னர் அழகுச் சோலையில் அமர்ந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலித்த மண்டைதீவு சிறுப்புலம் முருகன்- யுத்தம் இடம்பெற்றபோது  மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தினால்,ஆலயம் கைவிடப்பட்டு-பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டிருந்ததாகவும்-யுத்த அமைதிக்குப்பின்னர் பற்றைகள் இயந்திரங்களின் மூலம் வெட்டி அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்ட போதிலும்-ஆலயம் மிகக்கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும்,ஆலயத்தினை முழுமையாக புனரமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும்,ஆலய தர்மகத்தா ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.

இவ்வாலயத்தினை முழுமையாகப் புனரமைக்க அதிகளவு நிதி தேவைப்படுவதனால்,புலம்பெயர் மண்ணில் வசிக்கும்- இக்கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள்  உதவிட முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux