வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் உல்லாசப்பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு வேலணை பிரதேசசபையினால் அமைக்கப்பட்டு வந்த-கட்டணக்கழிப்பிடம்-கட்டணகுளியலறை-மற்றும் கட்டண வாகனத்தரிப்பிடம் என்பன தற்போது செயற்படத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவகம் நோக்கி வருகை தரும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளுக்கு இச்சேவை பேருதவியாக இருப்பதோடு-இக்கட்டணசேவையினால் வேலணை பிரதேசசபைக்கு அதிகளவான வருமானமும் கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
