அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த 20.04.2018 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்-மேலும் முதல் தடவையாக,இனிச்சபுளியடி முருகன் 26.04.2018 வியாழக்கிழமை மாலை ஊருக்குள் வீதியுலா வந்து-அல்லைப்பிட்டி கிழக்கில் அமைந்துள்ள ஆதிவைரவர் கோவிலில் வேட்டையாடி விட்டு பின் கறண்டப்பாய் முருகனையும் தரிசித்து தன் இருப்பிடம் திரும்பிய கண்கொள்ளாக்காட்சியியும்-மறுநாள் இரவு முருகப்பெருமான் சப்பரத்தில் அமர்ந்து வீதியுலா வந்த காட்சியும்-அதனைத் தொடர்ந்து அல்லைப்பிட்டியில் முதல் தடவையாக,இனிச்சபுளியடி முருகன் சித்தரத்தேர்மீது அமர்ந்து வீதியுலா வந்த திருக்காட்சியும் இடம்பெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட…. தேர்,தீர்த்தம்,சப்பரம்,வேட்டை,கொடியேற்றம்,ஆகிய முக்கிய திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் அனைத்தும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.