இலங்கை தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் -பிரான்ஸ், தனது அலுவலகத்தை யாழில் திறந்துள்ளது-விபரங்கள் இணைப்பு!

இலங்கை தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் -பிரான்ஸ் என்ற அமைப்பானது கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்பு நிதி உதவிகளை செய்து வருகின்றமை யாவரும் அறிந்தது.

இவ்வமைப்பின் இலங்கைக்கான புதிய அலுவலகத்தை இல 155 மானிப்பாய் வீதி யாழ்ப்பாணத்தில் 14/04/2018 அன்று அதாவது தமிழ் புதுவருட திருநாள் அன்று காலை 10^00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
இவ்வமைப்பினை பிரான்ஸ் நாட்டில் வேலணை மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி என்பன சேர்ந்தே ஆரம்பித்தனர். .(இக்கல்லூரிகளின் பழையமாணவர்கள் ) தற்போது பதின்மூன்று பாடசாலைகளின் பழையமாணவர்கள் இவ்வமைப்புடன் கைகோத்துள்ளனர்.
இவற்றைவிட பிரித்தானியா தேசத்திலுள்ள வேலணை ஒன்றியத்தின் இளையோர் அமைப்பினர் மற்றும் கனடா தேசத்திலுள்ள அளவெட்டி அருணோதயா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் .போன்ற பிறநாட்டிலுள்ள புலம்பெயர் மக்களின் உதவிக்கரமும் இலங்கை தமிழ் பழையமாணவர் ஒன்றியம் -பிரான்ஸ் என்ற இந்த கல்விக்கு உதவும் அமைப்புக்கு கிடைத்துள்ளது.
இலங்கையில் வடக்கு கிழக்கில் இன்றுவரை 850 மாணவர்கள் இவ்வுதவித்திட்டத்தின் உள்வாங்கப்பட்டு பயன்பெற்றுவருகின்றனர்.
இத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்ட பயனாளிகள் தொடர்ச்சியான கண்கானிக்கப்பட்டே மாதாந்த உதவிகளை பெற்றுவருகின்றனர்.
இக்கண்காணிப்பு பாடசாலைமட்டம் மற்றும் கல்விச்செயற்பாட்டு அறிக்கைகளூடாக கண்காணிக்கப்படுவர்.மேலும் அவர்களின்கல்வி அடைவுமட்டம்.பாடசாலை வரவுபதிவு போன்றன கருத்தில் கொள்ளப்படுகின்றது.

இத்திட்டத்தின் முதல் கட்டம் 1000 மாணவர்களுக்கான உதவித்திட்டமாகும்.
இத்திட்டத்திற்கு வழங்குகின்ற நிதியானது நூறுவீதம் மாணவருக்கு சென்றடையும்.என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. பணம் மாணவர்களின் வங்கி சேமிப்புக்கணக்கில் வரவிடப்படும்.
மாணவர் அப்பணத்தை தான் கல்வி பயிலும் பாடசாலை அதிபரின் சிபார்சுடன் பெற்றுக்கொள்ளமுடியும்.
இத்திட்டத்தினூடாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாணவர்களின் கல்விக்கு ஔியூட்ட வாருங்கள்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்புக்கு UAETSfrance.com இலங்கை தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் -பிரான்ஸ் என்ற அமைப்பானது கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்பு நிதி உதவிகளை செய்து வருகின்றமை யாவரும் அறிந்தது.

இவ்வமைப்பின் இலங்கைக்கான புதிய அலுவலகத்தை இல 155 மானிப்பாய் வீதி யாழ்ப்பாணத்தில் 14/04/2018 அன்று அதாவது தமிழ் புதுவருட திருநாள் அன்று காலை 10^00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
இவ்வமைப்பினை பிரான்ஸ் நாட்டில் வேலணை மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி என்பன சேர்ந்தே ஆரம்பித்தனர். .(இக்கல்லூரிகளின் பழையமாணவர்கள் ) தற்போது பதின்மூன்று பாடசாலைகளின் பழையமாணவர்கள் இவ்வமைப்புடன் கைகோத்துள்ளனர்.
இவற்றைவிட பிரித்தானியா தேசத்திலுள்ள வேலணை ஒன்றியத்தின் இளையோர் அமைப்பினர் மற்றும் கனடா தேசத்திலுள்ள அளவெட்டி அருணோதயா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் .போன்ற பிறநாட்டிலுள்ள புலம்பெயர் மக்களின் உதவிக்கரமும் இலங்கை தமிழ் பழையமாணவர் ஒன்றியம் -பிரான்ஸ் என்ற இந்த கல்விக்கு உதவும் அமைப்புக்கு கிடைத்துள்ளது.
இலங்கையில் வடக்கு கிழக்கில் இன்றுவரை 850 மாணவர்கள் இவ்வுதவித்திட்டத்தின் உள்வாங்கப்பட்டு பயன்பெற்றுவருகின்றனர்.
இத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்ட பயனாளிகள் தொடர்ச்சியான கண்கானிக்கப்பட்டே மாதாந்த உதவிகளை பெற்றுவருகின்றனர்.
இக்கண்காணிப்பு பாடசாலைமட்டம் மற்றும் கல்விச்செயற்பாட்டு அறிக்கைகளூடாக கண்காணிக்கப்படுவர்.மேலும் அவர்களின்கல்வி அடைவுமட்டம்.பாடசாலை வரவுபதிவு போன்றன கருத்தில் கொள்ளப்படுகின்றது.

இத்திட்டத்தின் முதல் கட்டம் 1000 மாணவர்களுக்கான உதவித்திட்டமாகும்.
இத்திட்டத்திற்கு வழங்குகின்ற நிதியானது நூறுவீதம் மாணவருக்கு சென்றடையும்.என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. பணம் மாணவர்களின் வங்கி சேமிப்புக்கணக்கில் வரவிடப்படும்.
மாணவர் அப்பணத்தை தான் கல்வி பயிலும் பாடசாலை அதிபரின் சிபார்சுடன் பெற்றுக்கொள்ளமுடியும்.
இத்திட்டத்தினூடாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாணவர்களின் கல்விக்கு ஔியூட்ட வாருங்கள்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்புகளுக்கு ..WWW.UAETS-france.Fr 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux