கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தார்,நடிகர் கருணாஸ்-படங்கள் இணைப்பு!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தார்,நடிகர் கருணாஸ்-படங்கள் இணைப்பு!

 1954 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களை அழிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் தமிழர்களை அழிக்கும் திட்டங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் 413 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் இன்று சந்தித்தார்.  இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்தார். தற்போது அரசு மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த கருணாஸ், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் இந்தியச் சட்ட மன்றத்தில் பிரேரணை  ஒன்றைக் கொண்டு, உறவினர்களுக்குக் கைகொடுப்பேன்.

இந்தியாவில் உள்ள  ஈழத்தமிழர்களின் மாணவர்கள் உயர்கல்வி தொடர்பவதில் சிக்கல் நிலையில் உள்ளனர்.அவர்களுக்காக எனது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கான உயர்கல்வி பாடசாலை ஒன்றை கட்டுகின்றேன். இதற்கு வடக்கு முதல்வரை அழைக்கவே நான் இலங்கை வந்தேன். என்றார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux