பிரான்ஸில் வசிக்கும்-திருமதி அனுசிகா சித்ராங்கன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,நடைபெற்ற அறப்பணிநிகழ்வு-படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்-திருமதி அனுசிகா சித்ராங்கன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,நடைபெற்ற அறப்பணிநிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 356 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

பிரான்ஸில் வசிக்கும்-திருமதி அனுசிகா சித்ராங்கன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு-10.03.2018 சனிக்கிழமை அன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதோடு –மேலும் அன்றைய தினம் திருமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பழங்குடி கிராமங்களில் ஒன்றான சீதனவெளி என்னும் கிராமத்தில் கொடிய வறுமையில் வாடும்-பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட ஏழு குடும்பத்திற்கு உலர் உணவுப்பொருட்களும்-அக்குடும்பத்தில் பாடசாலை செல்லும் மாணவனுக்கு ஒரு துவிச்சக்கர வண்டியும்-அக்கிராமத்தில் அமைந்துள்ள அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பணிக்கு,அல்லையூர் இணைய அறப்பணியின் ஊடாக நிதி வழங்கிய-திரு திருமதி சித்ராங்கன்-அனுசிகா தம்பதியினருக்கு-இவர்களின் சார்பில் நன்றியினைத் தெரிவிப்பதோடு-திருமதி அனுசிகா சித்ராங்கன் அவர்களுக்கு,பிறந்தநாள் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux