அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 36 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 36 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 36 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-27.02.2018 செவ்வாய்கிழமை மாலை ஜந்து மணிக்கு-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில்-தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும்,மண்டைதீவு- அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளாரினால்,ஆத்மசாந்தி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அத்தோடு அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின்  நினைவாக- அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் முன்பள்ளிக்கு   16500.00 ரூபா பெறுமதியான மேசை ஒன்றும்     வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு திருப்பலிக்குப்பின்னர் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.

அன்னாரின் ஆத்மா சாந்திக்கான விஷேட திருப்பலி பூஜையில்-   அல்லைப்பிட்டி மக்கள்  பலர் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது.

அவர்கள் அனைவருக்கும் அமரர் அலெக்சாண்டர் அவர்களின் குடும்பத்தினர்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux