உயிர்வாழப்போராடும் ஓர் இளைஞனின் பணிவான வேண்டுகோள்-கருணையுள்ளவர்களே!படித்துப்பாருங்கள்!

உயிர்வாழப்போராடும் ஓர் இளைஞனின் பணிவான வேண்டுகோள்-கருணையுள்ளவர்களே!படித்துப்பாருங்கள்!

பெயர்:திரு  வேலுப்பிள்ளை தர்மகுலம்

பிறந்த. திகதி :28/11/1990

நிரந்தர வதிவிடம், 5ம் வாய்க்கால், பெரிய பரந்தன், கிளிநொச்சி 

திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தை 5 வயதில் உள்ளது.

இவர் 09/05/ 2015 அன்று நடந்த விபத்தில் முள்ளந்தண்டு உடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவ்வேளை சிறுநீரகத்துடன் தொடர்புடைய நரம்பு பாதிக்கப்பட்டதனால், சிறுநீர் கழிவது இவருக்குத் தெரியாத  உணர்வற்ற நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலை இவரின்  மரணம் வரை தொடரலாம் என்று  வைத்தியர் இவரின்  மனைவிக்கு முன்னர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயத்தை மனதில் வைத்து இவரின்மனைவி  வேறு திருமணம் செய்து போய் விட்டார்.

இவர் நிலையானது  இன்று வரை ஒரு நாளுக்கு  4 பம்பஸ் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையிலும் அதற்கான செலவு    450. ரூபாய்  வரை முடிவதாகவும் மேலும் தெரிவிக்கின்றார். 
இவரது  சிறுநீரகமும்  பழுதடைந்து கொண்டு  செல்வதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.      எல்லாராலும் கை விடப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சை பெற்றுக்கொள்ள பணம் இல்லாத காரணத்தாலும் செய்வறியாது கலங்கி நிக்கின்றார், 

 தனது உடலில் உள்ள குறையினால் கொஞ்சம்  கொஞ்சமாக,  தனது வாழ் நாளை இழந்த  வண்ணம் வேதனைபடும் இவர் கருணை உள்ளங்களிடமிருந்து    உதவியை எதிர் பார்க்கின்றார். 

இவருடைய நேரடி தொலைபேசி இலக்கம்-0094769951860

வங்கி இலக்கம்-8060133154-(Commercial  Bank)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux