கனடாவில் வசிக்கும்,செல்வன் சத்தியநேசன் ஆதவனின் பிறந்தநாளை முன்னிட்டு,இடம்பெற்ற இரு அறப்பணி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

கனடாவில் வசிக்கும்,செல்வன் சத்தியநேசன் ஆதவனின் பிறந்தநாளை முன்னிட்டு,இடம்பெற்ற இரு அறப்பணி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

கனடாவில் வசிக்கும்- செல்வன் சத்தியநேசன் ஆதவனின் 2வது பிறந்தநாளை முன்னிட்டு-20.02.2018 செவ்வாய்க்கிழமை அன்று 40 ஆயிரம் ரூபாக்களில் இரு அறப்பணிநிகழ்வுகள் அல்லையூர் இணையம் ஊடாக முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வு-01

அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில்,கொடிய வறுமையில் வாடும்-பிறவியிலேயே நடக்கமுடியாத வாலிபருக்கு சக்கரநாற்காலி ஒன்று வழங்கி வைப்பு!

 செல்வன் சத்திநேசன் ஆதவனின் 2வது பிறந்தநாளை முன்னிட்டு-பிறவியிலேயே நடக்கமுடியாமல் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த -கிளிநொச்சி மணியங்குளம் பகுதியைச் சேர்ந்த,செல்வன் இராமர் டேவிட் என்னும் பெயர் கொண்ட -18 வயதுடைய வாலிபருக்கு- சகலவசதிகளுடன் கூlடிய (27 ஆயிரம் ரூபாக்கள் செலவுகள் உட்பட) சக்கர நாற்காலி ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தற்போதைய தலைவர் திரு நித்தியானந்தன் அவர்களும்-எமது அறப்பணிக்குடும்பத்தின் உறுப்பினர் திரு இ.சிவநாதன் அவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வு-02

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 346 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

வேலணை,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,கனடாவில் வசிக்கும்-சத்தியநேசன்-லக்ஸி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதவனின் 2வது பிறந்தநாளை முன்னிட்டு-20.02.2018 புதன்கிழமை அன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

செல்வன் ஆதவன்,வேலணை பள்ளம்புலத்தைச் சேர்ந்த,திரு சத்தியநேசன்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,Luxcy தம்பதிகளின் செல்வப்புதல்வன் என்பதுடன் மேலும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு பரிமளகாந்தன்-மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி கண்ணகை பரிமளகாந்தன் தம்பதிகளின் அன்புப்பேரனுமாவார் என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.

செல்வன் ஆதவனை,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux