அல்லைப்பிட்டி மண்ணின் மைந்தர்கள் மூவர்,யாழ் ஆயரினால் கௌரவிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி மண்ணின் மைந்தர்கள் மூவர்,யாழ் ஆயரினால் கௌரவிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் ஞாயிற்றுக்கிழமை  (18.02.2018) இன்று மண்ணின் மைந்தர் மூவர், யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் கௌரவிக்கப்பட்டனர்.

அல்லைப்பிட்டி  பராசக்தி  வித்தியாலயத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும்- பல இலட்சம் ரூபா செலவிலான புனரமைப்பு,மற்றும் அல்லைப்பிட்டியின்  பிரதான வீதிகள் அனைத்துக்கும் மின்விளக்குகளை பொருத்தும் பணியினை மேற்கொண்டு வரும்- திருமதி இரத்தினசபாபதி ஸ்ரீரங்கநாயகி (ரங்கம்) ஜெயகோபால் மற்றும் திரு அல்பிரட் ஜோர்ஜ் அவர்கள் (கார்மேல் அன்னை ஆலய புனரமைப்பு பணிகள், மற்றும் தமது இல்லத்தை மறைபணி தளமாக வழங்கியமை) மேலும் திரு கபிரியேல் பிலேந்திரன் அவர்கள் (கலை இலக்கிய பேரவையின் கலாபூசனம்,கலைவாரி,யாழ்முத்து,சமூகசேவைகள் ஆகிய விருதுகளை வென்றவர்) ஆகிய மூவருமே ஆயரினால் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து  35 ஆண்டுகள் மறையாசிரியர்  பணியாற்றிய  திருமதி றொபேட் பற்றிசியா, 25 ஆண்டுகள் மறைக்கல்விப் பணிக்காக ஆசிரியர் திருமதி அன்ரனி பெர்னான்டோ கிருபைவரம் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் தாதியர் பயிற்சியை நிறைவு செய்து திருச்சிலுவை கன்னியர் சபை வைத்திய சாலையில் பணியாற்றும் ஐந்து தாதியர்களும் ஆயரினால் கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux