மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற,சிறப்பு அபிஷேக,அன்னதான நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற,சிறப்பு அபிஷேக,அன்னதான நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

அல்லையூர் இணையம்,தாயகத்தில் முன்னெடுத்து வரும் ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம்,என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் தொடர்ச்சியாகவும்,345 வது தடவையாகவும், சனிக்கிழமை (17.02.2018)  அன்று மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சிறப்பு அன்னதான நிகழ்வு  இடம்பெற்றது.

மண்டைதீவு  மண்ணின் மைந்தரும், டென்மார்க்கில் வசிப்பவருமாகிய,திரு சக்திதாசன் சிவசரணம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலனசபையினரால் -இந்த அன்னதான நிகழ்வு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.

திரு சக்திதாசன் சிவசரணம் அவர்களின் விருப்பத்தின் பேரில்,தெரிவு செய்யப்பட்ட 25  குடும்ப உறுப்பினர்களுக்கு, சிறு அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.

தனது பிறந்தநாள் அன்று-தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணில்-இப்படி ஒரு சிறப்பு அன்னதான அறப்பணி நிகழ்வினை முன்னுதாரணமாக  நடத்திய, திரு சக்திதாசன் சிவசரணம் அவர்களை-நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் வாழ்த்திச் சென்றதைக் காண முடிந்ததாக, எமது அறப்பணியாளர் தெரிவித்துள்ளார்.

எமது  அல்லையூர் இணைய அறப்பணிக்கு, தொடர்ந்து உதவிவரும்-திரு சக்திதாசன் சிவசரணம் அவர்களை நாமும் மனதார வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux