யாழ்  மண்டைதீவில் நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில் நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில்,வறுமைக்கோட்டின் கீழ் தவிக்கும் மக்களுக்கு மாதந்தோறும்  உலர்உணவுப்பொருட்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

மண்டைதீவுக் கிரமத்தில்   மிகவும் வறுமையான  நிலையில் வசிக்கும் வெளிநாட்டு உதவிகள் இல்லாத- முதியோர்கள்,  வலுவிழந்தோர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட (15) பதினைந்து குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக கடந்த  கார்த்திகை(11) மாதம் முதல் உலர் உணவுப்பொருட்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டு-  தலா ஒரு குடும்பத்தினருக்கு இரண்டாயிரம்  ரூபாக்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாம்  புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்,ஊரில் வாழ்கின்ற ஆதரவற்றவர்களின் துயர்துடைத்திட  வேண்டும் என்று நினைத்து செயலாற்றும்-மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் திரு சி.ஜெயசிங்கம் அவர்களின் முயற்சியிலும்,மண்டைதீவு இணையத்தின் இயக்குனரும்,சமூக ஆர்வலருமான திரு சிவப்பிரகாசம் ஸ்ரீகுமாரன் அவர்களின் அனுசரணையிலும்-இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்திற்கான நிதியுதவியினை தற்போது வழங்கிவருபவர்களின் பெயர் விபரங்கள் கீழ் வருமாறு..

திரு  சி.ஜெயசிங்கம் (கனடா) 

திரு  சிவ.ஸ்ரீகுமாரன்(சுவிஸ் )

திரு செ.இந்திரன் (லண்டன்)

திரு  ஞா.பகீர்தரன் (சுவிஸ் ) 

திருமதி புவனேஸ்வரன் லதா (சுவிஸ் ) 

திரு சிவகுருநாதன் (அப்பு )மன்னவன்( கனடா)

திரு முகுந்தன் குலசிங்கநாதன் (லண்டன்)

திரு தயாகரன் வைரவநாதன் (கனடா)

திரு இரத்தினசபாபதி யோகநாதன் -இந்திரன் (பிரான்ஸ்)

திரு சக்திதாசன் சிவசரணம் (டென்மார்க்)

திரு சண்முகலிங்கம் சச்சிதானந்தம் (சின்னவன்-சுவிஸ்)

திரு செல்லையா சிவா (பிரான்ஸ்)

மேலும் இப்பணியில் இணைந்து கொண்டு ஆதரவற்றுத் தவிக்கும் மண்டைதீவுமக்களுக்கு உதவிட முன்வருமாறு  பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு:- இப்பணியில் இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் தங்களால் முடிந்த உதவியினை செய்தால் வலுவிழந்து இருப்பவர்களையும் மேலும் இணைத்துக்கொள்ளலாம் ,மாதாந்தம் 25ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிக்குள் இக்கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு…

திரு சி.ஜெயசிங்கம் 0014163190409  (viber)-கனடா

திரு சிவ ஸ்ரீகுமாரன் 00410767881472-சுவிஸ்

கார்த்திகை மாதம் வழங்கப்பட் ட உலர்உணவுப்பொருள்கள் கொடுப்பனவில் பயன் பெற்ற பதினைந்து (15)பயனாளிகளின்  பெயர் விபரங்கள் பின்வருமாறு .

(1)-விநாயகமூர்த்தி மனோகரன் 1ம் வட்டாரம் .
(2)-கந்தசாமி சின்னட்டி அம்மா 2ம் வட்டாரம் .
(3)-கையிலாசபிள்ளை ராதா 2ம் வட்டாரம் .
(4)-பத்மநாதன் உருத்திராதேவி 6ம் வட்டாரம்
(5)-பிரபலசிங்கம் சின்னம்மா 6ம் வட்டாரம்
(6)-தயா மகள் (வலுவிழந்தவர் )6ம் வட்டாரம்
(7)-பரமானந்தம் லோகேஸ் 6ம் வட்டாரம்
(8)-பகீரதி பகவசிங்கம் 7ம் வட்டாரம்
(9)-காந்தி கனகரத்தினம் 7ம் வட்டாரம்
(10)-இராமலிங்கம் மகாலட்சுமி 7ம் வட்டாரம்
(11)-செல்லையா கௌரி 7ம் வட்டாரம்
(12)-சந்திரா கனகரத்தினம்( 1ம் )8ம் வட்டாரம்
(13)-சுப்பிரமணியம் திலகவதி 8ம் வட்டாரம்
(14)-ஜெயபாலசிங்கம் புனிதா 8ம் வட்டாரம்
(15)-குமாரசாமி அஞ்சலி 8ம் வட்டாரம்

இவர்களுடன்  மேலும் மார்கழி மாதம் ஒன்பது(9) பயனாளிகள் பயன் பெற்று உள்ளனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு :

(16)-நடராசா ரஞ்சா 6ம் வட்டாரம் .
(17)-நமசிவாயம் ரஞ்சினி 6ம் வட்டாரம்
(18)-மதியாபரணம் சுந்தரநாயகி 6ம் வட்டாரம்
(19)-விமலநாதன் கமலா 6ம் வட்டாரம்
(20)-அப்பாத்தம்பி மணியம்மா (தேவாரம் பாடுபவர் )6ம் வட்டாரம்
(21)-சபாரத்தினம் ஆனந்தி 6ம் வட்டாரம்
(22)-செல்லத்துரை ஏகாம்பரம் (இளையப்பு )8ம் வட்டாரம்
(23)-தருமகுலசிங்கம் ராஜேஸ்வரி (சின்னட்டி ஆச்சி )8ம் வட்டாரம்
(24)-ஐயம்பிள்ளை பவளம்மா 8ம் வட்டாரம் .
மேற்படி மொத்தமாக இருபத்திநான்கு பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.

மேலும் வலுவிழந்தவர்களை இணைத்துக்கொள்ள வெளிநாடுகளில் வசிக்கும் மண்டைதீவு மக்கள் அனைவரும் உதவி செய்ய முன்வருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் .

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux