மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின்  வில்லுமண்டபத் திருப்பணிக்கு உதவிட வேண்டுகோள்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் வில்லுமண்டபத் திருப்பணிக்கு உதவிட வேண்டுகோள்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தின் பிரதான வீதியின் அருகில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும்,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானுக்கு அமைக்கப்பட்டு வரும், வில்லுமண்டப புனருத்தான திருப்பணிகளை விரைவுபடுத்தும் முகமாக, உலகமெல்லாம் பரந்து வாழும்-விநாயகப்பெருமானின் பக்தர்களிடம்  பணமாகவோ அல்லது  பொருளாகவோ உதவிகளை வழங்க முன்வருமாறு-ஆலய பரிபாலன சபையினர்-அல்லையூர் இணையம் ஊடாகவும்-முகநூல் ஊடாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்த வருடம் சித்திரை மாதம் ஆரம்பமாகவுள்ள, வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னதாக-வில்லுமண்டபத் திருபணிகள் நிறைவுபெறவேண்டும்-என்ற நோக்கோடு திருப்பணி வேலைகள் விரைவாக நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux