மண்கும்பானைச் சேர்ந்த,பிரபலமான நகைக்கடை  உரிமையாளர் மாரடைப்பினால் திடீர் மரணம்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,பிரபலமான நகைக்கடை உரிமையாளர் மாரடைப்பினால் திடீர் மரணம்-விபரங்கள் இணைப்பு!

ஈழத்தமிழர்களால்,நன்கு அறியப்பட்ட பெயர் தான் லலிதா ஜீவல்லறி-லலிதாவின் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியானது- இலங்கையில் மட்டுமல்ல-அன்று தமிழக ரசிகர்களையும் கவர்ந்த,இலங்கை வானொலி நிகழ்ச்சியாகும்.

அன்று அந்த பிரபலமான நிகழ்ச்சியை வழங்கிய லலிதா ஜீவல்லறியின்அன்றைய உரிமையாளர் அமரர் செல்லையா இந்திரசித்து  அவர்களின் புதல்வரும்,இன்று யாழ் நகரில் பிரபலமான, லலிதா ஜீவல்லறியின் உரிமையாளருமான திரு இந்திரசித்து விக்னேஸ்வரன் அவர்களே 02.01.2018 செவ்வாய்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால்   சிகிச்சை பலனின்றி  மரணமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இளம் வர்த்தகரான ( 41 வயது) இந்திரசித்து விக்னேஸ்வரன் அவர்களின் திடீர் இழப்பு-அவரின்  உறவினர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux