பரிஸ் லாசப்பல் வர்த்தக நிலையங்களில், அன்னதானப்பணிக்கு நிதி திரட்டிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பரிஸ் லாசப்பல் வர்த்தக நிலையங்களில், அன்னதானப்பணிக்கு நிதி திரட்டிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் , தாயகத்தில் முன்னெடுத்து வரும் “ஆயிரம்(1000) தடவைகள் அன்னதானம்” என்னும் ஆதரவற்றவர்களின் பசிதீர்க்கும் அரிய பணிக்காக,  கடந்த 22.12.2017 வெள்ளிக்கிழமை  அன்று மாலை- பரிஸ் லாசப்பல் பகுதியில் அமைந்துள்ள தமிழர்  வியாபார நிலையங்களில்  உண்டியல் குலுக்கி நிதி சேகரித்தனர்.

அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் தலைமையில், பெரியவர் திரு ரனிஸ்கிளாஸ் வஸ்தியாப்பிள்ளை-திரு அலெக்சாண்டர் அன்ரன்-திரு செல்லத்துரை சகாதேவன்-திரு சின்னத்தம்பி பாபு மற்றும் அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா ஆகியோர் இணைந்து கொண்டனர்.

சில மணிநேரத்தில், லாசப்பல் பகுதியில் அமைந்துள்ள  அதிகமான வியாபார நிலையங்களுக்குச் சென்று உண்டியல் குலுக்கி நிதி திரட்டினோம்.

எமது சிந்தனைக்கு, முதல் தடவையாக  செயல் வடிவம் கொடுத்தபோது-சேர்ந்த தொகை 299.18  Euro, க்கள் ஆகும்.

எம்மை புன்னகையோடு வரவேற்று நிதி  வழங்கிய பரிஸ் தமிழ் வர்த்த நிலையத்தினர் அனைவருக்கும்-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எம்மால்  பரிஸ் லாசப்பல் பகுதியில் உண்டியல் குலுக்கித் திரட்டிய  நிதியில்   (299.18  Euro)  செலவுகள் போக மீதி தாயகத்தில் வசிக்கும் ஆதரவற்ற மாணவர்களின் பசிபோக்கிட பயன்படுத்தப்படும்-என்பதனை அறியத்தருகின்றோம்.

அது பற்றிய விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux