மட்டக்களப்பு காரைதீவில் அமைந்துள்ள, 200வருடங்கள் பழைமைவாய்ந்த சுவாமி விபுலாநந்தரின்  இல்லம் புனரமைப்பு!

மட்டக்களப்பு காரைதீவில் அமைந்துள்ள, 200வருடங்கள் பழைமைவாய்ந்த சுவாமி விபுலாநந்தரின் இல்லம் புனரமைப்பு!

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த 200வருடகாலம் பழைமை வாய்ந்த காரைதீவு வீடு தற்போது புனரமைக்கப்பட்டுவருகிறது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் இப்புனரமைப்புப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

காரைதீவு விபுலாநந்த மணிமண்டபத்தின் முன்னால் உள்ள சுவாமிகளின் இல்லத்தை சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம் முன்னெடுத்துவருகின்றது. பழைமை குன்றாத வகையில் ஆனால் அழகாக இப்புனரமைப்புப்பணிகளை மேற்கொண்டுவருவதாக அதற்குப்பொறுப்பான பணிமன்றத்தின் பொருளாளர் றோட்டரியன் ச.ருத்திரன் தெரிவித்தார்.

சுவாமிகள் 1892.03.27ஆம் திகதி இப்பூவுலகில் அவதரித்தமை தெரிந்ததே. அதாவது அவர் பிறந்து 125 வருடங்கள் தாண்டிவிட்டன. அவரது தந்தையார் சாமித்தம்பி ஒரு விதானையாhர். அவர் குடும்பம் அந்த இடத்தில் அதற்கு முன்னரே பல்லாண்டுகாலாமாக வாழந்துவந்ததாக உதிரஉறவுகள் இன்று தெரிவிக்கின்றன.

200வருடங்களுக்கும் முந்திய இப்பழைமை வாய்ந்த வீட்டின் ஓடுகள் நாட்டோடால் வேயப்பட்டிருந்தது. சுவர்கள் தூண்கள் அனைத்தும் நீற்றுக்கட்டாக இருந்தபோதிலும் மிகவும் உறுதியாக அகலமாக காணப்படுகின்றது.

காரைதீவிலுள்ள இவ் இல்லமானது தொல்பொருட் திணைக்களத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.தற்போது அவ்வில்லமானது அம்கா ட்சியகமாகப்பேணப்பட்டுவருகின்றது. அங்குவரும் சுவாமிகளின் அபிமானிகள் இவ்வில்லத்தைப் பார்வையிட்டுச்செல்வது வழமை.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux