சூழகம் அமைப்பினால்,அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் தேவாலயத்தில் கல்வி பயிலும்  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-படங்கள் இணைப்பு!

சூழகம் அமைப்பினால்,அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் தேவாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-படங்கள் இணைப்பு!

சூழகம் அமைப்பினால் 19.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் தேவாலயத்தில் கல்வி பயிலும் 30 மாணவர்களுக்கு 20000 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன .

சூழகம் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களான  திரு . மகாலிங்கம் கனிஸ்குமார் ( ஊரெழு ) அவர்கள் 12000 ரூபாய் பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்களையும், திரு . கருணாகரன் நாவலன் ( புங்குடுதீவு ) அவர்கள் 8000 ரூபாய் பெறுமதியான புத்தகப்பைகளையும், அன்பளிப்பு செய்திருந்தனர் .

தீவக கோட்ட குருமுதல்வரும் , தீவக சிவில் சமூக செயலாளருமாகிய அருட்தந்தை டேவிட் அடிகளார் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில் சூழகம் அமைப்பின் செயலாளர் குணாளன் கருணாகரன் , பொருளாளர் சபா . பரமேஸ்வரன் , மற்றும் தீவக சிவில் சமூக நிர்வாக குழு உறுப்பினர் நாவலன் கருணாகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux