மண்டைதீவில் மாரிகாலத்தில் சேமக்காலைக்குச் செல்வதற்கு பாதையின்றி சிரமப்படும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவில் மாரிகாலத்தில் சேமக்காலைக்குச் செல்வதற்கு பாதையின்றி சிரமப்படும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம், வேலணை பிரதேசசபையின் ஆளுகைக்குள் அமைந்திருக்கும், மண்டைதீவுக்  கிராமத்து மக்கள் -இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக,சேமக்காலைக்கு எடுத்துச் செல்வதற்கு  பாதையின்றி பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

மாரிகாலத்தில் மழைவெள்ளத்தின் ஊடாகவே சேமக்காலைக்கு சடலங்களை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும்  மேலும்  தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சேமக்காலைக்குச் செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்த போதிலும்–இதுவரை எந்தவிதமான நடைவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் கோபத்துடன் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux