மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் அமரர் கணபதிப்பிள்ளை நடராசா அவர்களின்  இறுதியாத்திரையின் காணொளி இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் அமரர் கணபதிப்பிள்ளை நடராசா அவர்களின் இறுதியாத்திரையின் காணொளி இணைப்பு!

மண்டைதீவு    மக்களினால் நன்கு      அறியப்பட்டவரும்,மண்டைதீவு  கண்ணகை அம்மன்  மற்றும் வேப்பந்திடல் முத்துமாரி  அம்மன்  ஆலய நிர்வாகங்களில் பதவி வகித்தவரும்-சமூக ஆர்வலருமாகிய  அமரர் கணபதிப்பிள்ளை நடராசா அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.அன்னார் அல்லைப்பிட்டி கிழக்கில்  வசித்த அமரர்      கணபதிப்பிள்ளை இராசரட்ணம்     அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.


யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராசா அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தில்லைவனம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அறிவழகன்(அறிவு- பிரான்ஸ்), அன்பழகன்(பிரான்ஸ்), மதியழகன்(மதிபோட்டோ- பிரான்ஸ்), ரவியழகன்(ரவி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசரட்ணம், வியாழம்மா, காமாட்சி, கனகம்மா மற்றும் பரமானந்தம், சோதிலட்சிமி, சரஸ்வதி, முத்துலட்சிமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியசீலி(பிரான்ஸ்), யூஜினி(பிரான்ஸ்), துர்க்காதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற காங்கேசன், கமலாசினி(பங்கசம்), லோகேஸ்வரி, பூங்கோதை, கலாவதி, காலஞ்சென்ற ரஞ்சினி, சிவகுமார், தயாளன், விமலன், அம்பிகை(சூரி), அம்பிகைபாகன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சயந்தன், அனுசியன், ஆகாஸ், மதுசா, அபினாஸ், ரதுயா, வினுயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 07.30 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறுதி வணக்கத்திற்காக அவரது பிறப்பிடமான  மண்டைதீவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து மண்டைதீவு தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மகன்மார்கள்
தொடர்புகளுக்கு
அறிவழகன்(அறிவு) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779782182
அன்பழகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659243673
மதியழகன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33143005297
செல்லிடப்பேசி: +33629042624
ரவியழகன்(ரவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33664440676
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94770338223
செல்லிடப்பேசி: +94766767710

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux