கனடாவில் வசிக்கும்,வேலணையைச் சேர்ந்த,கதிர்மாஸ்ரர் அவர்களின் திருமணநாளை முன்னிட்டு-சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

கனடாவில் வசிக்கும்,வேலணையைச் சேர்ந்த,கதிர்மாஸ்ரர் அவர்களின் திருமணநாளை முன்னிட்டு-சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

வேலணை மேற்கைச் சேர்ந்தவரும் கனடாவி்ல் வசித்துவருபவருமான V.T.C தனியார் கல்வி நிறுவனத்தின் நிர்வாகியுமான திரு கதிர் மாஸ்ரர் அவர்களின் 25 வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு- 16.09.2017 சனிக்கிழமை  அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள  விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு  இல்லக்குழந்தைகளுக்கு, அல்லையூர் இணைய அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் சிறப்புணவு வழங்கப்பட்டது.

திருமண நாளைக் கொண்டாடும்- கதிர்காமநாதன் ரஞ்சிதலெட்சுமி தம்பதியினர், மேலும் வாழ்வில் எல்லாச் செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ,வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மனின் அருள் வேண்டி வாழ்த்துகின்றோம்.

அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 285 வது தடவையாக -இச்சிறப்புணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux