மண்கும்பான் முருகனின் கொடியேற்றம், தேர்,தீர்த்தம்,கொடியிறக்கம் ஆகிய திருவிழாக்களின்   முழுமையான வீடியோப்பதிவுகள் இணைப்பு!

மண்கும்பான் முருகனின் கொடியேற்றம், தேர்,தீர்த்தம்,கொடியிறக்கம் ஆகிய திருவிழாக்களின் முழுமையான வீடியோப்பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள முருகமூர்த்தி கோவிலின்  வருடாந்த,மகோற்சவம் கடந்த 30.08.2017 புதன்கிழமை அன்று  காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து 06.09.2017 புதன்கிழமை மாலை சப்பரத்திருவிழாவும்-மறுநாள் 07.09.2017 வியாழக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-08.09.2017 வெள்ளிக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற்றது.

மண்கும்பான் முருகனின் மகோற்சவத்தைக் காண வந்த அடியவர்களின் பசி போக்கிட-  மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி மணிமண்டபத்தில் திருவிழா உபயகாரர்களினால் பத்துத்தினங்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றத்தின் உபயகாரர்…

திரு  ஈசன்  (மண்கும்பான்-லண்டன்)

தேர்த்திருவிழா உபயகாரர்கள்…

திரு நல்லநாதசிவம் கேதீஸ்வரன் (மண்கும்பான்-லண்டன்)

திரு பாலசுந்தரம் (மண்கும்பான்-பிரான்ஸ்)

தீர்த்தத்திருவிழா உபயகாரர்கள்….

திரு நாகராசா இராஜலிங்கம் (மண்கும்பான்-பிரான்ஸ்)

திரு சோமசுந்தரம் சோமகாந்தன்(மண்கும்பான்-பிரான்ஸ்)Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux