யா/மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யா/மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இந்திய துணைத் தூதரகத்தின் நிதி அனுசரணையுடன் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள போரினால் சிதைவடைந்த யாழ்/மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்திற்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 14.07.2017 அன்று காலை 8.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு. ஜோண் கொலின்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் பாடசாலை சமூகத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்புத் திருப்பலியைத் தொடர்ந்து, விருந்தினர்கள் மாலை அணிவித்து, புதிதாக பாடசாலைக் கட்டடத்தொகுதி அமையவிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு – அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமாகிய அருட்பணி ம. டேவிட் அடிகளாரின் இறை ஆசீரைத் தொடர்ந்து, முதலில் கட்டத்திதற்கான அடிக்கல்லினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் அவர்கள் நாட்டிவைத்தார்.

அவரைத் தொடர்ந்து அருட்பணி ம. டேவிற், சமாதான நீதவான் அ. மேரிமெற்றில்டா, யாழ்/மண்டைதீவு றோ.க. வித்தியாலய அதிபர் ஜோண் கொலின்ஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகப் பிரதிநிதிகள் என பலரும் இறையாசீர் வேண்டி பாடசாலைக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதனையும், தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு – அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமாகிய அருட்பணி ம. டேவிட் அடிகளார் இறை ஆசீர் வழங்குவதனையும், பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் அவர்கள் பாடசாலைக் கட்டடத்திற்கான முதல் அடிக்கல்லினை எடுத்து வைப்பததையும், தொடர்ந்து பங்குத்தந்தையும் ஏனையவர்களும் கற்களை எடுத்து வைப்பதனையும், இறுதியாக புனித பேதுருவானவர் பங்கு மண்டபத்தில் நடந்த கலந்துரையாடலில் விருந்தினர்கள் உரை நிகழ்த்துவதனையும், நிகழ்வில் கலந்து கொண்டோரையும் கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux