அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் தேவராசா சாந்தலிங்கம்(சாந்தன்) அவர்களின் 23வது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் -29-09-2013 ஞாயிறு அன்று யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள-நிழல்கள் ஆதரவற்றோர் இல்ல மாணவர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
அமரர் தேவராசா சாந்தலிங்கம் அவர்களின் தாயாரின் அனுமதியுடனும்-அனுசரணையுடனும்-அல்லையூர் இணையம் தொடர்ந்து 3வது ஆண்டாக இன்நிகழ்வினை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.அத்தோடு யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள ஆதரவற்ற மாணவர்களுடன் அல்லையூர் இணையத்தின் ஆதரவில் நடைபெற்ற-26வது நிகழ்வு இதுவாகும்.அத்தோடு அமரர் சாந்தலிங்கம் பிறந்து வளர்ந்த அல்லைப்பிட்டியிலும் 29-09-2013 அன்று மாலை வாகீசர் சனசமுக நிலையத்திலும் பிரார்த்தனை நிகழ்வுடன் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.