தந்தையை,இழந்த மூன்று மாணவச்செல்வங்களின் கல்விக்கு உதவிட முன் வந்துள்ள அல்லையூர் இணையம்-விபரங்கள் இணைப்பு!

தந்தையை,இழந்த மூன்று மாணவச்செல்வங்களின் கல்விக்கு உதவிட முன் வந்துள்ள அல்லையூர் இணையம்-விபரங்கள் இணைப்பு!

இலங்கையிலிருந்து  இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்து வந்த போது- சிறுநீரகப்பாதிப்பினால் தந்தை இந்தியாவில் இறந்து விட- தாயாருடன் தாயகம் திரும்பி கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வரும்-சகோதர சிறுவர்களான-இந்த மாணவர்களின் நலன்கருதி -இவர்களின் கல்விக்கு உதவிட    அல்லையூர் இணையம்  முன் வந்துள்ளது.

இந்த மாதத்திலிருந்து  29.06.2017 அன்று கிளிநொச்சியில்  வங்கிக்கணக்கு ஒன்று திறக்கப்பட்டு- அல்லையூர் இணையத்தினால் 10 ஆயிரம் ரூபாக்கள்-வைப்பிலிடப்பட்டு வங்கிப்புத்தகம்  29.06.2017 வியாழக்கிழமை அன்று இக்குழந்தைகளின் தாயாரிடம் வழங்கி வைக்கப்பட்டது. 

மேலும்  தொடர்ந்து மாதம் தோறும் இவர்களின் கல்விக்கான நிதி வைப்பிலிடப்படவுள்ளது-என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தந்தையை இழந்த, இம்மாணவர்களின் கல்விக்கான   நிதியினை -மண்கும்பானைச் சேர்ந்த,கருணையுள்ளம் மிக்க குடும்பத்தலைவி ஒருவரே வழங்க முன்வந்துள்ளார்-என்பதனையும் நன்றியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாணவர்களின் விபரங்கள்….

1.ஜதார்த்தபிரதீப் கௌரிதரன் 
பிறந்த திகதி- 2006.11.20. ஆறாம் வகுப்பு படிக்கின்றார்.

2. ஜதார்த்தபிரதீப் கௌரீஸ்வரன் 
பிறந்த திகதி 2009.08.27 மூன்றாம் வகுப்பு படிக்கின்றார்.

3. ஜதார்த்தபிரதீப்.கௌரிகரன் 
பிறந்த திகதி- 2012.05.16 
பாலர் வகுப்பு படிக்கின்றார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux