உள்ளத்தை உறைய வைக்கும் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை பற்றிய சட்டமா அதிபரின் புதிய தகவல்- தகவல் இணைப்பு!

உள்ளத்தை உறைய வைக்கும் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை பற்றிய சட்டமா அதிபரின் புதிய தகவல்- தகவல் இணைப்பு!

வெளி­நாட்­டில் நடந்த உடன்­பாட்­டுக்கு அமை­யவே வித்­தியா கூட்டுக் கொலை : தீர்ப்­பா­யத்­தி­டம் பல தக­வல்­களை முன்­வைத்­தார் பதில் சட்­டமா அதி­பர்
“சுவிஸ் குமா­ரால் வெளி­நாட்­டில் செய்­யப்­பட்ட உடன்­ப­டிக்­கைக்கு அமை ­வா­கவே புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை செய்­யப்­பட்­டார். 
சந்­தே­க­ந­பர்­கள் அனை­வ­ரும் உற­வி­னர்­கள். அவர்­க­ளின் கூட்­டுத் திட்­டத்­துக்குள் மாணவி வித்­தியா துர­திஸ்­ட­வ­ச­மா­கச் சிக்­கி­விட்­டார். மாண­விக்­கான நீதியை தீர்ப்­பா­யம் வழங்­கும்” இவ்­வாறு பதில் சட்­டமா அதி­பர் டப்­புள்ள டி லிவேரா  தீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் நேற்­றுத் தெரி­வித்­தார். 
புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கின் தொடர் விசா­ரணை 3 மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அடங்­கிய தீர்ப்­பா­யத்­தின் (ட்ரயல் அட் பார்) முன்­னி­லை­யில்  யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் நேற்று ஆரம்­ப­மா­னது. வழக்­கின் ஆரம்­பத்­தில் ஒழுங்கு விதி­மு­றை­க­ளின் பிர­கா­ரம் சட்­டமா அதி­ப­ரின் தொடக்க உரை இடம்­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.
பதில் சட்­டமா அதி­பர்  டப்­புள்ள டி லிவேரா  மேலும் தெரி­வித்­த­தா­வது:
நீதி­யான தீர்ப்பை தீர்ப்­பா­யம் வழங்­கும் இலங்­கை­யின் சட்ட வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக 3 மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அடங்­கிய தீர்ப்­பா­யம் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் நடை­பெ­று­கின்­றது. 
யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெ­று­கின்ற தீர்ப்­பாய விசா­ரணை சிறப்­பான முடி­வைக் கொடுக்­கும். அதில் எனக்கு எந்­த­வித சந்­தே­க­மும் இல்லை.  வலு­வான நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தும்  தீர்ப்­பா­யத்தை வடக்கு மாகா­ணத்­தில் அமைத்­த­மைக்கு நீதித்­து­றைக்கு நன்றி கூறு­கின்­றேன். 
9 எதி­ரி­களுக்கு எதி­ரா­க­வும் 41 குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. சதித்­திட்­டம் தீட்­டி­யமை, வன்­பு­ணர்ந்­தமை, கொலை செய்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­கள் இந்த 9 எதி­ரி­க­ளுக்­கும் எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.
மிகக் கொடூ­ர­மான – காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான –  மிரு­கத்­த­ன­மான இந்­தச் செய­லுக்கு    உயிரை விட்­டது 18 வய­துச் சிறு­மி­யான மாணவி வித்­தியா. இந்­தச் சம்­ப­வம் காலை 7.30 மணிக்கு நடை­பெற்­றது. மாண­வி­யின் படு­கொ­லை­யால் நாடு முழு­வ­தும் அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யது. 
வடக்கு மாகா­ணத்­தில் சட்ட ஒழுங்கு பிரள்­வையே இந்­தச் சம்­ப­வம் ஏற்­ப­டுத்­தி­யது. மாணவ மாண­வி­யர் மீது அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஊர்­கா­வற்­றுறை பொலி­ஸா­ரால்  விசா­ரிக்­கப்­பட்­டது. பின்பு குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வி­ன­ரி­டம் இந்த வழக்­குப் பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. ஒரு வருட காலத்­துக்­குள் முடி­வு­றுத்­தப்­ப­டு­வ­தற்கு  இந்த விசா­ரணை ஒரு இல­கு­வான காரி­ய­மல்ல. 
கடி­ன­மான வழக்கு
இந்­தக் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான குற்­றத்­தைச் செய்த  எதி­ரி­களை அடை­யா­ளப்­ப­டுத்த  குற்­றப்­பு­ல­னாய்­வுத் திணைக்­க­ளம் நுணுக்­க­மான – ஆழ­மான முறை­யில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது.
தீர்ப்­பா­யத்­தில் முழு நம்­பிக்கை
நீதியை நிலை­நாட்ட எதி­ரி­க­ளை­யும் சான்­று­க­ளை­யும் தேடிச் செல்ல  குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரி­க­ளுக்கு மிக­வும் கடி­ன­மான காரி­ய­மா­க­வி­ருந்­தது. நான் இந்த இடத்­திலே குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரி­க­ளுக்கு நன்றி கூறு­கின்­றேன்.
 
பதில் சட்­டமா அதி­பர் என்ற வகை­யில் நான் நம்­பு­கி­றேன், இந்த தீர்­மா­னம் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தும். நான் இந்­தத் தீர்ப்­பா­யத்தை நிச்­ச­யம் நம்­பு­கின்­றேன். விரை­வாக நீதி­யான  நியா­ய­மான தீர்ப்பை வழங்­கு­மென நம்­பு­கி­றேன். தீர்ப்­பா­யத்­தால் சாட்­சி­க­ளின் உரி­மை­கள் உரித்­துக்­கள் பாது­காக்­கப்­ப­டும் என்­றும் நம்­பு­கின்­றேன். 
மாண­வி­யின் கொலைக்கு பெரும் பின்­னணி உண்டு
சந்­தே­க­ந­பர்­க­ளைப் பாது­காக்­கின்ற முயற்­சி­கள்  நடை­பெற்­றுக் கொண்­ட­தாக அறி­வேன். அது தொடர்­பாக விசா­ரணை  நடத்­தப்­ப­டும். இது ஒரு வன்­பு­ணர்வோ அல்ல கொலையோ அல்ல அதற்கு மேலாக ஒரு பின்­னணி உண்டு. இந்த குற்­ற­மா­னது முற்­கூட்­டியே அறி­யப்­பட்ட ஒரு திட்­ட­மா­கும். திட்­ட­மி­டப்­பட்ட குற்­றம் உல­க­ள­வில் இதன் தயார்ப்­ப­டுத்­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 
அதா­வது பன்­னாட்டு மயப்­ப­டுத்­தப்­பட்ட குற்­றம் என்று கூறு­வ­தில் நான் தயக்­கம் காட்­ட­மாட்­டேன்.  இந்த குற்­றத்­தின் பின்­ன­ணி­யில் உள்ள இன்­னொரு குழு­வி­னர் நாட்­டுக்கு கெட்ட பெயர் உண்­டாக்­கும் செயலை செய்ய முனை­கின்­றார்­கள். உல­க­ள­வில் இந்­தக் குற்­றத்­துக்­கான திட்­ட­மி­டல் நடந்­தி­ருக்­கின்­றது.
உற­வி­னர்­கள் இணைந்து
கூட்­டுக் கொலை
சான்­று­கள் சூழ்­நி­லைச் சான்­று­க­ளு­டன் பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்ட குற்ற ஒப்­பு­தல்­க­ளு­டன் இந்த விசா­ரணை ஆரம்­ப­மாக உள்­ளது. 
1,2 மற்­றும் 3 எதி­ரி­கள் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள். 4ஆம்  9ஆம் எதி­ரி­க­ளும் சகோ­த­ரர்­கள். 6 ஆம் எதி­ரி­யும் 9ஆம் எதி­ரி­யும் மச்­சான் முறை­யான உற­வி­னர்­கள். 5பேரும் உற­வுக்­கா­ரர்­கள். 
5,7 மற்­றும் 8ஆம் எதி­ரி­யும் உற­வுக்­கா­ரர் அல்ல. அதா­வது இந்­தக் குற்­றத்­தின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யான 9ஆம் எதி­ரி­யாக நோக்­கும் நேரலை ஒளி­ப­ரப்பு செய்து பன்­னாட்­டுக்கு காட்­டும் முக­மாக நடாத்­தப்­பட்ட இந்­தச் சம்­ப­வத்­துக்கு 9ஆம் எதிரி தனது மச்­ச­னான 5ஆம் எதி­ரி­யைத் தொடர்பு கொண்­டுள்­ளார்.
வெளி­நாட்­டி­லேயே
கூட்டு வன்­பு­ணர்­வுக்கு
உடன்­ப­டிக்கை
வெளி­நாடு ஒன்­றி­லி­ருந்து ஒரு உடன்­பாட்டை 9ஆம் எதிரி பெற்­றுள்­ளார். நேர­டி­யான ஒரு ஆபா­சப் படத்தை  உரு­வாக்கி விற்­பது தொடர்­பில் இந்த பன்­னாட்­டுச் சந்­தை­யின் உடன்­பாடு தெற்­கா­சிய நாட்­டில் உள்ள இளம் பெண்­க­ளின் ஆபாச வீடி­யோவே ஆகும். 9ஆம் எதிரி சுவிஸ் நாட்­டின் குடி­யு­ரிமை பெற்ற ஒரு­வர்.  இலங்­கைக்கு அதி­க­ள­வில் வந்து செல்­கின்­ற­வ­ரும்­கூட. 
இந்­தக் குற்­ற­வா­ளி­கள் 9 பேரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தெரிந்­த­வர்­கள். 9 எதி­ரி­க­ளும் இளம் பெண்ணை கூட்­டா­கச் சேர்ந்து வன்­பு­ணர்ந்து காணொலி எடுத்து பின்பு கொலை செய்­வ­து­தான் திட்­டம். அவர்­க­ளின் திட்­டத்­துக்­குள் தூர­திஸ்­ட­வ­ச­மாக சிக்­கிய பெண் வித்­தியா.
சுவிஸ் குமார் நடந்­த­வை­களை உள­றி­விட்­டார்
9ஆவது எதிரி (சுவிஸ் குமார்) சம்­ப­வம் தொடர்­பான  அனைத்து விட­யங்­க­ளை­யும் சிறை­யில் வைத்து இன்­னொரு நப­ருக்கு  கூறி­யுள்­ளார். சுவி­ஸில் வைத்து அவர் உடன்­பாடு வழங்­கி­விட்டு இலங்­கை­யில் வந்து நிறை­வேற்­று­வது நிதிச் சல­வைக்கு உள்­ளிட்ட குற்­ற­மா­கும். இந்­தப் புலன் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டும் போது 20 மில்­லி­யன்  ரூபா லஞ்­சம் வழங்க முற்­பட்­டது. இது­வும் நாங்­கள் அறிந்­தி­ருக்­கி­றோம். இதன் சான்று விளக்­கத்­தின் போது வழங்­கப்­ப­டும்.
காட்­டு­மி­ரண்­டித்­த­னத்தை காணொலி எடுத்­துள்­ள­னர்
2,3,5,6 ஆகிய 4 எதி­ரி­க­ளால் கொடூ­ர­மாக வன்­பு­ண­ரப்­பட்ட அந்­தப் பெண் பிள்­ளை­யின்  உடற் சோத­னை­யில் யோனி­ம­டல் இல்­லா­மல் செய்­யப்­பட்டோ அல்­லது அழிக்­கப்­பட்டோ இருக்­கி­றன்­றது. பிறப்­பு­றுப்­பைச் சுற்­றிப் பல காயங்­கள்  காணப்­ப­டு­வ­தாக இந்த சோதனை தெரி­யப்­ப­டுத்­து­கின்­றது.  இது ஒரு வன்­மை­யான கூட்டு வன்­பு­ணர்­வா­கும்.
இதன்­போது 5, 6ஆம் எதி­ரி­க­ளால் மாறி மாறி காணொலி எடுக்­கப்­பட்­டது. 5, 6ஆம் எதி­ரி­கள் தமக்­கெ­திரே இந்­தக் காணொ­லியை முழு­மை­யான  வடி­வ­மாக மாற்ற முற­ப­டு­கின்­றார்­கள். உடன்­பாடு செய்­யப்­பட்ட அந்­தக் கட்­சிக்கு இந்­தக் காணொலி விற்­கப்­ப­டு­கின்­றது.
காணொ­லியை விற்­ற­மைக்கு சான்­று­கள் கிடைத்­து­விட்­டன
இந்­தக் காணொ­லி­யா­னது விற்க்­கப்­பட்டு விட்­டதை சான்­று­கள் மூலம்  அறி­ய­மு­டி­கி­றது. கூட்­டாக வன்­பு­ணர்­வு­விட்டு அந்த மாணவி கழுத்து நெரித்­துக் கொலை செய்­யப்­பட்­ட­டி­ருக்­கி­றார். பிட­ரிப் பகு­தி­க­ளி­லும் காயங்­கள் காணப்­பட்­டன. பல காயங்­கள் உட­லில் காணப்­பட்­டன. வன்­மை­யான முறை­யில் மாணவி கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்.
இந்­தச் சம்­ப­வம் மாணவி பாட­சாலை சென்று கொண்­டி­ருந்த போது நடை­பெற்­றி­ருக்­கி­றது.  யாரு­மற்ற பற்­றை­வெ­ளி­யில் பிள்­ளை­யைக் கடத்தி, பின்பு யாரு­மற்ற பாழ­டைந்த  வீட்­டில் கூட்டு  வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­பட்டு மீள­வும் அவர் கடத்­தப்­பட்ட இடத்­துக்கு இழுத்­துக் கொண்டு வரப்­பட்டு கழுத்து நெரித்­துக் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்.
கை, கால்­கள் இழுத்து அரு­கி­லுள்ள மரத்­தில் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. முழு நிர்­வா­ண­மாக மாணவி இருந்­தார். நாட்­டி­னு­டைய சுய கௌர­வத்­தை­யும் களங்­கப்­ப­டுத்­தும் நோக்­கத்­திலே இந்த விட­யம் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அந்த நோக்­கத்­தி­லேயே இச்­சம்­ப­வம் நடை­பெற்­றி­ருக்­கின்­றது – என்­றார். 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux