மண்டைதீவைச் சேர்ந்த,தயாகரன் அக்சரா,தயாகரன் வித்தகன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு

மண்டைதீவைச் சேர்ந்த,தயாகரன் அக்சரா,தயாகரன் வித்தகன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு

மண்டைதீவைச் சேர்ந்த,பிரபல புகையிலை வர்த்தகர் அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் அன்புப் பேரப்பிள்ளைகளும்-கனடாவில் வசிக்கும்-திரு திருமதி தயாகரன்-யாழினி தம்பதிகளின் இரட்டைக்குழந்தைகளான-அன்புச் செல்வங்கள், அக்சராவித்தகன் ஆகிய இருவரின் 4வது பிறந்த நாள் 05.06.2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் கொண்டாடப்படுகின்றது.

இக்குழந்தைகளின் பிறந்த நாளை முன்னிட்டு -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள விஷேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு  இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நாள் சிறப்புணவு உணவு வழங்கப்பட்டது.

திரு திருமதி தயாகரன்-யாழினி தம்பதிகளின் இரட்டைக்குழந்தைகளான,அக்சரா-வித்தகன் ஆகிய இருவரும் படிப்பில் சிறந்து விளங்க-இறையருள் வேண்டி வாழ்த்துகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux