மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஞாபகார்த்தமாக-வறிய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஞாபகார்த்தமாக-வறிய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த, அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (மண்டைதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தான மரபுவழி பஞ்ச தர்ம கர்த்தா)அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை) முன்னிட்டு-யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மாணவ மாணவிகள் 40 பேருக்கு புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு 09.05.2017 செவ்வாய்கிழமை அன்று வடமாராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் தந்தையை இழந்த உயர்தரம் கற்கும் இரு மாணவிகளுக்கு ஜயாயிரம் ரூபாக்கள் கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்காக  வழங்கி வைக்கப்பட்டன.

இ்ந்நிகழ்வுக்காக, அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் குடும்பத்தினரால் 40 ஆயிரம் ரூபாக்கள் அல்லையூர் இணையத்தின் இயக்குனரிடம் வழங்கப்பட்டது .

அன்னாரின் குடும்பத்தினருக்கு மாணவர்கள் சார்பிலும்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux