மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் இருவரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவு-விபரங்கள் இணைப்பு!

மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் இருவரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவு-விபரங்கள் இணைப்பு!

யாழ் – புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் இருவரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வித்தியா கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 10, 12ஆவது சந்தேகநபர்களை விடுவிக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றபோது காணாமல் போன வித்தியா, பின்னர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்த போதும் சந்கேதநபர்கள் தொடர்பான உறுதியான எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது தொடர்பாக அண்மையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, இக் கொலை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறும் சந்தேகநபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux