வேலணை வைத்தியசாலையின்  வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டிடம் சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டிடம் சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம்  வேலணை பிரதேச மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்குரிய புதிய கட்டிடத் திறப்புவிழாவும் -அமரர் கை.மகேந்திரலிங்கம் அவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவும்  கடந்த 03.04.2017 திங்கட்கிழமை அன்று  திறந்து வைக்கப்பட்டது.

வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டிடத்தை, இலங்கை மத்திய அரசின் சுகாதாரத்துறையின் அமைச்சரான மருத்துவர் இராஜித சேனாரத்தின அவர்களச சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாராளூமன்ற உறுப்பினர்களான திரு மா.சேனாதிராசா -திரு சி.சிறிதரன் – திரு ஈ. சரவணபவன் ஆகியோருடன் மேலும்  வடக்கு மாகாண அரசின் சுகாதார அமைச்சர் திரு ப.சத்தியலிங்கம் அவர்களும்-வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரத்தினம் அவர்களும் கலந்துகொண்டதுடன் மேலும்  மருத்துவர்கள் மற்றும்  சுகாதாரதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வேலணை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலம்புரிச்சங்கத்தினரால் பாராளுமன்றஉறுப்பினர்களான திரு சி.சிறிதரன் மற்றும்  திரு சரவணபவனிடமும் -மாகாண சபை உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களுடன் மருத்துவமனையின் நிலவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது

இம்மருத்துவமனையானதுமுன்பு B தரமாக இருந்து பின்னர் இரணுவ நடைவடிக்கையால் மக்கள் தொகை குறைந்தமையால் தரம் Cக்கு மாற்றப்பட்டது .தற்போது மக்கள்மீள் குடியேற்றம் வந்தபின்னர் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் நோயாளர் வருகையும் அதிகரித்து காணப்படுவதால் தற்போது ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதையும் சுட்டிக்காட்டப்பட்டது .இதனால் தரத்தை மீளவும் தரத்துக்கு உயர்த்தி தரும்படிவேண்டுகோள் விடுக்கப்பட்டது அதற்கு தம்மால் முடிந்த ஒத்துளைப்பை செய்வதாக கூறியதுடன் வருகை தந்த உயரதிகாரிகளுடன் கதைக்கப்பட்டது .

மத்திய அமைச்சருடன் கதைத்துவிட்டு வெளியே வந்த சிறிதரன் அவர்கள் எதிர்வரும் செப்ரம்பர்  மாதத்துக்குள் தரமுயர்த்தப்படுவதுடன் ஆளணிப்பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்வதாக கதைக்கப்பட்டதாக கூறினார்.

தரமுயர்த்துவது வடமாகாண அரசின் சுகாதார அமைச்சால் தான் செய்யப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு இன்று தொடக்கம் பற்சிகிச்சை நிலையமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux