வேலணை மத்திய கல்லூரியின் திறமைமிக்க மாணவி ரேணுகா தற்கொலை-விபரங்கள் இணைப்பு!

வேலணை மத்திய கல்லூரியின் திறமைமிக்க மாணவி ரேணுகா தற்கொலை-விபரங்கள் இணைப்பு!

தீவ­கம் வேல­ணை  துறையூரைச் சேர்ந்த  மாணவி ஒருவர் ஜி.சீ.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சை­யில் எதிர்­பார்த்த பெறு­பேறு கிடைக்­க­வில்லை என்ற  மன விரக்தியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்­துக் கொண்டதாக ஊர்காவற்றுறை   பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர்.
தீவகம் வேலணை துறையூரைச்  சேர்ந்த செல்வி  அருட்பிரகாசம்.ரேணுசா (வயது-17) என்ற மாண­வியே பரி­தா­ப­கரமாக உயிர் துறந்ததாக தெரிய வருகின்றது.
வேலணை மத்­திய கல்­லூ­ரி­யில் கல்வி கற்­கும் குறித்த மாணவி 2016ஆம் ஆண்டு டிசெம்­ப­ரில் நடை­பெற்ற ஜி.சீ.ஈ. சாதா­ர­ணப் பரீட்­சை­யில் தோற்­றி­யி­ருந்­ததாகவும்- பரீட்­சைப் பெறு­பேறு கடந்த வாரம் வெளி­யா­கி­ய போது அவ­ருக்கு ஏ 8பி பெறு­பேறு வந்­தது  என்றும் ஆனால்  அவர் எதிர்பார்த்த  8 ஏ பி பெறு­பேறு  வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இத­னால் மனமுடைந்த மாணவி- நேற்­றை­ய­ தி­னம் தாயும் தந்­தை­யும்  ஆல­யத்­துக்­குச் சென்ற சம­யம் வீட்­டில் தூக்­கில் தொங்கி உயிரை மாய்த்­துக் கொண்டதாகவும்-    அவர் எழுதி வைத்த கடி­த­மும் மீட்­கப்­பட்டுள்ளது என்று பொலி­ஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மாணவியின்  உட­லம் நேற்று மாலை உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதாகவும் – குறித்த மாண­வி­யின் மூத்த சகோ­த­ரர்­கள் இரு­வர் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளாக உள்­ள­னர் என்று தெரிய வருகின்றது.    

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux