தீவகத்தின் புண்ணிய பூமிக்குள் கடத்தி வரப்பட்ட கேரள பத்து கஞ்சாப் பொதிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தின் புண்ணிய பூமிக்குள் கடத்தி வரப்பட்ட கேரள பத்து கஞ்சாப் பொதிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் நயினாதீவு மேற்கு கடற்கரை பிரதேசத்தில், புதன்  அதிகாலை பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து -பொலிசாருடன் கிராம அலுவலர்கள் சிலர்  இணைந்து பத்து  கேரள கஞ்சாப்பொதிகளை   மீட்டிருப்பதாக  நயினாதீவிலிருந்து நிழற்பட ஆதாரத்துடன்  எம்.குமரன் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பத்து கஞ்சாப்பொதிகளின் நிறை சுமார் 51 கிலோ வரை  இருப்பதாகவும்-ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக பொதிகள் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதிக்கு, இந்தியாவிலிருந்து கஞ்சாப் பொதிகள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதுடன் -மாணவர்கள் மத்தியில் கஞ்சா பாவனையும் அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.17097750_1404233556316023_915486660198546179_o 17103613_1404235029649209_3937389162117555855_n 17156069_1404235559649156_6884634388902562406_n 17190622_1404233929649319_27432796598178666_n 17190793_1404234649649247_3468329181758411926_n 17156298_1404234169649295_3981125818612893585_n 17190804_1404236222982423_5976373336173182392_n 17191358_1404233822982663_5170812661771433131_n 17200950_1404234352982610_6655630004374471014_n 17201056_1404235372982508_7113547222140901326_n 17201432_1404235199649192_5967554076061043979_n 17201229_1404235282982517_2867438669920998333_n 17021737_1404236739649038_8201033120071071467_n 17098543_1404236336315745_6031177925029939985_n 17098711_1404236066315772_4083477531363488569_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux