அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளரும்-நிழற்படப்பிடிப்பாளருமாகிய,திரு இ.சிவநாதன் அவர்களின் அன்பு மகள் அமரர் செல்வி அன்பரசி (பிரியா)அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு 16.02.2017 வியாழக்கிழமை அன்று வேலணையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.
அன்றைய தினம் அன்னாரின் நினைவாக- வன்னேரிக்குளத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் முதியோர் இல்ல முதியவர்களுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.