இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம் தீவகம் எழுவை தீவில் திறந்துவைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம் தீவகம் எழுவை தீவில் திறந்துவைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம் எழுவை தீவில் (10.02.2017 )வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது.

காற்றாலை, சூரிய சக்தி மற்றும் டீசல் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம், யாழ்.தீவகம்  எழுவைதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கமும் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த மின்சக்தி நிலையம், இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின்சக்தி நிலையமாகும்.

ரூபா 187 மில்லியன் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்சக்தி நிலையத்தினை மின்சக்தி மீளுருவாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரதி அமைச்சர் அஜித் பெரேரா மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

குறித்த மின்நிலையத்தின் மூலம் உருவாக்கப்படும் மின் அலகு ஒன்றிற்கு ரூபா 9.14 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன், மற்றும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பௌத்த மதத் தலைவர்கள், உட்பட இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய முகாமையாளர், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நிழற்பதிவு -முகநூல் நண்பர்கள்…

16641124_1936395486593894_183325635525739787_n 16508804_426054437728692_7990029875453760440_n 16508174_1936395603260549_215325954995798880_n 16508206_1936395293260580_6751109762913226653_n 16602785_1936395709927205_1270614136786921030_n 16508639_1936395569927219_6264956258755795259_n 16708178_1936395329927243_3165754149204774635_n 16649104_1936395229927253_4816197200572775560_n 16681564_245885659198156_6609477102881725834_n 16729164_426054064395396_8702736472844947779_n IMG_4587 16711532_426053817728754_1021574209427780852_n 16508825_426053474395455_3199596402801461312_n 16681471_426053544395448_1232949087575688049_n IMG_4589 IMG_4591 IMG_4592 (1) IMG_4584 16508160_1936396009927175_8490376478252373816_n 16602656_1936398339926942_8067479305752546371_n 16640532_1936396043260505_4199895609581930829_n 16640598_1936398223260287_2268967563772305884_n 16649396_1936398186593624_1130531149829464165_n 16507836_426053641062105_5815370410252618986_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux