வன்னியில் கணவனை இழந்த,மாற்றுவலுவுள்ள பெண்மணிக்கு, கறவை மாடு வழங்கிய அல்லையூர் இணையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

வன்னியில் கணவனை இழந்த,மாற்றுவலுவுள்ள பெண்மணிக்கு, கறவை மாடு வழங்கிய அல்லையூர் இணையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

கிளிநொச்சி பொன்நகர் மத்தியில் வசிக்கும்-திருமதி சசிகலா கலைச்செல்வன் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கான உதவியாக,70 ஆயிரம் ரூபா பெறுமதியான (செலவு உட்பட) கறவை மாடு ஒன்று தைப்பூஷ தினமான 09.02.2017 வியாழக்கிழமை அன்று வழங்கி வைக்கப்பட்டது .

திருமதி சசிகலா கலைச்செல்வன் அவர்கள் கொடிய யுத்தத்தில் கணவனை இழந்ததுடன் மேலும் வலுவிழந்தவராகவும், ஒரு கால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இவரின் புதல்வன் விஷேட தேவைக்குட்பட்டவராகவும் காணப்படுவதனால்,இவரை தெரிவு செய்து  இவரின் குடும்ப வருமானத்திற்கென கறவை மாட்டினை வழங்கினோம்.

இக்கறவை மாடு வழங்கும் நிகழ்வில்,பொன்நகர் கிராம சேவையாளர் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அலுவலகர் ஆகியோருடன் அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த திரு இ.சிவநாதன் அவர்களும் கலந்து கொண்டார். 

நிதி வழங்கிய கருணை உள்ளம்…..

இக்கறவை மாடு வழங்கியதற்கான நிதியினை, பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,கருணை உள்ளம் கொண்ட குடும்பத்தலைவி ஒருவர் வழங்கியிருந்தார்.அவருக்கு திருமதி சசிகலா கலைச்செல்வன் அவர்களின் சார்பிலும்-அல்லையூர் இணைய அறப்பணிக் குடும்பத்தினரின் சார்பிலும் நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

திருமதி சசிகலா கலைச்செல்வன்  அவர்களுக்கு வழங்கப்பட்ட கறவை மாடு-ஒரு நாளைக்கு 5 லீற்றர் வரை பால் தரக்கூடிய இனம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் வரும் சித்திரை மாதம் கன்று போடவுள்ளதாகவும் அறியத்தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

16650508_1382386605168931_167278647_n16684515_1382553268485598_1466688632_n16684475_1382386715168920_644674163_n 16650877_1382553725152219_1599292057_o 16586683_1382553718485553_2110755892_o 16650688_1382553875152204_193493137_o 16651066_1382553301818928_580314764_o 16650916_1382553325152259_1976118154_o 16667998_1382553658485559_877788841_o 16651445_1382553655152226_636029328_o 16667901_1382553565152235_1291844916_o 16684515_1382553268485598_1466688632_n 16709230_1382552855152306_2139900587_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux