யாழில் இராணுவ வாகனம் மீது ரயில் மோதியதில் இராணுவ வீரர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழில் இராணுவ வாகனம் மீது ரயில் மோதியதில் இராணுவ வீரர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ். அரியாலை நெலுக்குளம் பகுதியில் இராணுவத்தினர் பயணித்த வாகனம் ரயிலுடன் மோதுண்டதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று  வியாழன் முற்பகல் 10.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பயணித்த குறித்த இராணுவவாகனம் மீது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியதுடன் அந்த வாகனத்தை 300மீற்றர் வரை இழுத்து சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றயவர் படுகாயமடைந்த நிலையில் யா்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம்   தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
தகவல்-படங்கள்…யாழ் உதயன் இணையம்
16652684_1281081188672070_587486316_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux